> PARIHARAPOOJA.COM Skip to main content

Posts

Showing posts from October, 2020

பிரதோஷ ருத்ர மந்திரம் தமிழில்

இந்த மந்திரம் ருத்ர ஜபம் செய்வதற்கு சமமாகும். தினசரி 11 முறை கூறி வரலாம்.  ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் ஃபட்  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வ மங்கலாய பிங்களாய ஓம் நமஹ  ஓம் ஐம் ஐம் மனோ  வஞ்சித சித்தாய  ஐம் ஐம் ஓம் ஓம் ருத்ராய ரோக நாஷாய ஆகச்ச ச ராம் ஓம் நமஹ  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸாம் ஸாம் ஹ்ரீம் ஸ்ரீம் சங்கர்ஷணாய ஓம்  ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸபல்யாயை ஸித்தயே ஓம் நமஹ  ஓம் ஸ்ரீம் பம் சௌ பாலவர்தனாய பாலேஸ்வராய ருத்ராய  ஃபட்  ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹம் சமஸ்த கிரஹ தோஷ வினாசாய ஓம்  ஓம் கம் ஹளவும் ஷ்ரோம் க்ளவும் கம் ஓம் நமஹ  ஓம் ச்சும் சண்டீஸ்வராய தேஜஸ்ய ச்சும் ஓம்  ஃபட் ஓம் பவோத் பவ சம்பவாய இஷ்ட தர்ஷனாய ஓம் ஸம் ஓம் நமஹ 

Rudra Mantra Simple Version for Daily Chanting

Rudra Mantra Simple Version for Daily Chanting-This Gives the Similar Effect of Chanting Rudra Japam Fully. Do Chant this Whole Mantras 11 times Daily to get Blessings of Shiva !! Om Namah Shivaya !! OM HUM HUM SATRUSTAMBHANAYA HUM HUM OM PHAT OM SHRIM HRIM SHRIM SARVA MANGALAYA PINGALAYA OM NAMAH OM AIM AIM MANO VANCHITA SIDDHAYA AIM AIM OM OM RUDRAYA ROGANASHAYA AGACHA CHA RAM OM NAMAH OM SHRIM HRIM SAM SAM HRIM SHRIM SHANKARSHANAYA OM OM HRIM HRIM SAFALYAYAI SIDDHAYE OM NAMAH OM SHRIM BAM SOUGH BALAVARDHANAYA BALESHWARAYA RUDRAYA PHAT  OM HRAM HRIM HUM SAMASTHA GRAHA DOSHA VINASHAYA OM OM GAM HLUAM SHROUM GLAUM GAM OM NAMAH OM CHUM CHANDISHWARAYA TEJASYAYA CHUM OM PHAT OM BHAVOD BHAVA SAMBHAVAYA ISHTA DARSHANA OM SAM OM NAMAHA

நவராத்திரி எட்டாம் நாள் பூஜை வழிபாடு

 நவராத்திரி எட்டாம் நாள் பூஜை வழிபாடு  இந்நாளில் (24.10.20) துர்கையை 'கௌரி' மத்தவங்க வழிபடுவது வழக்கம். மயில் பச்சை நிற துணியை தேவிக்கு சாற்றுவது, அந்த நிறத்தின் துணியை சுமங்கலிகளுக்கு கொடுப்பது, அந்த நிற துணியை அணிந்து பூஜிப்பது நன்மை தரும். 'ஓம் கௌரியை நமஹ' மந்திரம் கூறவும். நாணயங்களை வைத்து தாமரை கோலமிடுவது சிறப்பு. சம்பங்கி பூக்களால் அலங்காரம் மற்றும் சம்பங்கி மலர் சாற்றுவது, உளர் திராட்சை, பால் சாதம் நிவேதனம் மற்றும் சுமங்கலிகளுக்கு உளர் திராட்சை பிரசாதம் கொடுப்பதும் நன்று.  

நவராத்திரி நான்காம் நாள் பூஜை வழிபாடு 20.10.20

 'கூஷ்மாண்டா' ரூபத்தில் நவராத்திரி நான்காம் நாள் துர்கையை வழிபடுவது வழக்கம். கூஷ்மாண்ட தேவிக்கு உரியது சிகப்பு வண்ணம். துர்கை அல்லது அம்பிகைக்கு சிகப்பு குங்குமம் இட்டும் சிகப்பு வண்ண மலர்கள் சாற்றியும், சிகப்பு துணி சாற்றியும் வழிபடுவது சிறப்பு. மேலும் சிகப்பு வண்ணம் உடலில் படும் வண்ணம் ஏதேனும் துணியை உடுத்தி வழிபடுவதும், சிகப்பு துணி, குங்குமம், மஞ்சள் மற்றும் தாம்பூலம் சுமங்கலிகளுக்கு அளிப்பதும்,பசு மாட்டிற்கு நெற்றியில் குங்குமம் இட்டு, செவ்வாழை பழம் கொடுப்பது மிகச்சிறந்தது. சுமங்கலிகளுக்கு சிகப்பு வண்ண கண்ணாடி வளையல்களும் கொடுக்கலாம். முடிந்தவர்கள் கோவிலில் அம்பிகைக்கு குங்கும அபிஷேகம் அல்லது அம்பிகை அர்ச்சனைக்கு குங்குமம் கொடுப்பதும் நன்று. இந்த நாளில் படிக்கட்டு கோலம் இடுவதும் (குங்குமம் கொண்டு) , அம்பிகைக்கு கூடுதலாக ஜாதி மல்லி பூ சாற்றுவதும் , கதம்ப சாதம் நிவேதனம் மற்றும் செவ்வாழை கொய்யா வைப்பதும் நிவேதனத்திற்கு சிறந்தது. சுமங்கலிகளுக்கும் ஜாதிமல்லி பூ வைத்து கொடுப்பது நல்லது. கூறவேண்டிய மந்திரம் : ஓம் கூஷ்மாண்டாயை நமஹ 

நவராத்திரி மூன்றாம் நாள் பூஜை வழிபாடு 19.10.20

 நவராத்திரி மூன்றாம் நாள் பூஜை வழிபாடு  இந்த நாளில் (19.10.20) துர்கையை  'சந்திரகாந்தா' தேவியாக வெள்ளை உடை தேவிக்கு உடுத்தியும் வெள்ளை துணி மேல் அமர்ந்தோ அல்லது வெள்ளை துணி வைத்தோ வழிபடுவதும், சுமங்கலிகளுக்கு வெள்ளை கரை உள்ள துணியை மஞ்சள் மற்றும் வெற்றி தாம்பூலத்துடன் மற்றும் பலாப்பழம் கொடுப்பது சிறந்த நன்மை தரும். மேலும் முத்து  மலர் கோலம் இடுவது, செண்பக பூ தேவிக்கு அணிவிப்பது, சக்கரை பொங்கல் நிவேதனம் செய்வது நன்று. கூற வேண்டிய மந்திரம் : ஓம் சந்திரகாந்தாயை நமஹ 

2020-2021 தமிழ் வருட அஷ்டமி தினங்கள்

நட்சத்திர பஞ்சாங்க நுணுக்கங்கள் | SECRETS OF NAKSHATRAS & PANCHANGA PART 5

நாட்களில் வரும் திதிகளில் நல்லவை ஆரம்பிக்க ஆகாதவை:- ஞாயிற்றுக்கிழமையில் அஸ்த நட்சத்திரத்தில் பஞ்சமி திதிஆகாதவை. திங்கட்கிழமையில் மிருக சீர்ச நட்சத்திரத்தில் சஷ்டி திதி ஆகாதவை. செவ்வாய்க்கிழமையில் அஸ்வினி நட்சத்திரத்தில் சப்தமி திதி ஆகாதவை. புதன்கிழமையில் அனுஷ நட்சத்திரத்தில் அஷ்டமி திதி ஆகாதவை. வியாழக்கிழமையில் பூச நட்சத்திரத்தில் ஏகாதசி திதி ஆகாதவை. வெள்ளிக்கிழமையில் ரேவதி நட்சத்திரத்தில் நவமி திதி ஆகாதவை. சனிக்கிழமையில் ரோகிணி நட்சத்திரத்தில் ஏகாதசி திதி ஆகாதவை. குறிப்பு:  தற்காலத்தில் பலரும் இது போன்ற நாட்களை தவிர்த்தால் எதுவுமே செய்ய முடியாமல் போகுமே எனவும்,இவை எல்லாம் பழைய பஞ்சாங்கம் எனவும் நினைக்கக்கூடும்.இவற்றிற்கு பின்னர் பெரும் அறிவியல் மற்றும் கணிதம் இணைந்துள்ளது. நம் முன்னோர்களும் மகரிஷிகளும் பலவற்றைவனவியல் அடிப்படையில் கணித்து பிறகே இவற்றை கூறிவைத்தனர். எனினும், இந்த நாட்களை புதிய விஷயங்களுக்கு மட்டும் தவிர்த்தால் போதுமானது. தற்காலத்தில் எவருக்கும் எந்த ஒரு காரியமும் எடுத்த உடன் வெற்றியை தந்து விடுவதில்லை. சில நேரங்களில் ஆரம்பிக்கும் செயல்கள் தோல்வியிலும், சில காரிய தடைகளும

நட்சத்திர பஞ்சாங்க நுணுக்கங்கள் | SECRETS OF NAKSHATRAS & PANCHANGA PART 4

தங்கம் வீட்டில் தங்குவதற்கு புதிய நகைகள் வாங்க ஏற்ற நாட்கள்:- விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம், கார்த்திகை, உத்திராடம் இந்தநட்சத்திரங்களை ஞாயிறு, செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில், லக்னம், மேஷம், விருட்சிகம், சிம்ம லக்னம் தவிர மற்ற லக்னங்கள் ஏற்ற லக்னங்களாகும். இக்காலங்களில்வாங்கும் ஆபரணங்கள், தங்க, வைர நகைகளானாலும் யோகம்தரும். குருதரும் நற்காலம்: குரு-மணமகன், மணமகளின் ராசிக்கு 2-7-5-9-11-இல் வரும்காலம் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தலாம். அவர்4-8-12-இல் வரும்பொழுது நற்காரியம் செய்ய ஏற்ற காலமல்ல. குருபகவான் 1-3-6-10-இல் வரும் காலம் இறைவனை பிரார்த்தனை செய்ய ஏற்ற காலம். குரு-ஆட்சி, உச்சம் பெற்று, நவாம்சத்தில் ஆட்சி உச்சம பெற்றும், வர்க்கோதமம் பெற்றும் எந்த இடத்தில் இருந்தாலும்நற்காரியம் செய்ய ஏற்ற காலமாகும். குரு நீசம்பெற்றாலும், பகை வீட்டில் இருந்தாலும் நன்மையானகாரியங்கள் செய்ய ஏற்ற காலமல்ல. சந்திரன் தரும் நற்காலம்: ஆட்சி சந்திரன் உச்சம் எந்த பெற்று இடத்தில் இருப்பது ராசியில், கல்விகற்க இருந்தாலும், புதிய அம்சத்தில் தொழில் துவங்க, திருமணம் செய்ய ஏற்ற காலமாகும். வர்க்கோதமம்

நட்சத்திர பஞ்சாங்க நுணுக்கங்கள் | SECRETS OF NAKSHATRAS & PANCHANGA PART 3

 பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் நாள்: குழந்தை பிறந்த 11-12-வது நாட்களில், மிருக சீர்சம், ரேவதி, சித்திரை, அனுஷம், உத்திரம், உத்திரட்டாதி, உத்திராடம், ரோகிணி, அஸ்த்தம், அஸ்வினி, பூசம், சுவாதி, புனர்பூசம், திருவோணம்,அவிட்டம், சதயம்-இந்த 16 நட்சத்திரங்களில், சதுர்தி, சதுர்தசி திதிகளில் பெயர் சூட்டலாம். பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுமுன் செய்ய வேண்டியவை: அக்குழந்தையின் பெற்றோர்கள் சிறு, தங்கத்தால் ஆன சிறு கூரில்லாத ஆணியால் ' ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை அதன் நாக்கில் எழுதல் வேண்டும். காதில்கிருஷ்ண கிருஷ்ணா, ராம ராமா ,நமசிவய நமசிவய போன்ற மந்திரங்கள் மற்றும் குலதெய்வ பெயரையும் மும்முறை கூறலாம். பெயர்சூட்டும் நிகழ்ச்சி சூரிய உதயத்திற்குப் பின் நண்பகலுக்கு முன்நல்ல முகூர்த்தத்தில் செய்தல் அவசியம். மாலையில், இரவில் செய்தல் கூடாது. பெயர் சூட்டும் நிலைகளை கீழ்க்கண்ட ஐந்து வழிகளில் நடத்தலாம்: அவர்களது குடும்பத்தின் குலதெய்வத்தின் பெயரை சூட்டலாம். அந்த குழந்தை பிறந்த மாதத்திற்கான முதல் எழுத்துவரும்படி பெயரை அமைத்துக் கொள்ளலாம். சித்திரை மாதத்தில் பிறந்தால் ஆண் என்றால் சிதம்பரம் என்றும், ப

நட்சத்திர பஞ்சாங்க நுணுக்கங்கள் | SECRETS OF NAKSHATRAS & PANCHANGA PART 2

  நல்ல காரியங்கள் துவங்க ஏற்ற லக்னம்: பிறந்த லக்னத்திற்கு 3-6-10-11-ஆக அமைத்துக் கொள்ளும் லக்னத்தில், அதற்கு 8-12-இல் எந்த கிரகங்களும் இல்லாமலும், சுபர் லக்னத்தில் இருந்தாலும், பார்த்தாலும், சந்திரன் 3-6-10-11-இல் இருக்கும் காலம் நல்ல காரியங்கள் துவங்க ஏற்ற காலமாகும். சுவர்கள் 1-4-7-10-8-12-லும், பாவிகள் 3-6-11-லும், குரு, சுக்கிரன் கேந்திரம்-கோணத்திலும் இருக்கும் காலமும் நல்ல காரியங்கள் துவங்க மிக உகந்த காலங்களாகும். வியாதிகள் தோன்றும் காலத்தால் ஏற்படும் பலன்கள்: சுவாதி, அஸ்த்தம், பூரம், பூராடம், பூரட்டாதி, ஆயில்யம், அனுஷம். இந்த நட்சத்திரங்களில் பெரிய வியாதிகள் தோன்றினால் அவ்வியாதியால் மாரகத்திற்கு நிகரான துன்பம் உடலளவிலும் மனதளவிலும் ஏற்பட வாய்ப்பு.  ரேவதி, அனுஷம் இந்த நட்சத்திரங்களில் காய்ச்சல் தோன்றினால் குணமாக நீண்ட காலமாகும். பரணி, திருவோணம், சதயம், சித்திரை இந்த நட்சத்திரங்களில் வியாதி தோன்றினால் வியாதி குணமாக 11 நாட்களாகும். விசாகம், கார்த்திகை, அஸ்வினி இந்த நட்சத்திரங்களில் வியாதி தோன்றினால் வியாதி குணமாக 9 நாட்களாகும். உத்திராடம், உத்திரட்டாதி, பூசம், புனர்பூசம், ரோகிணி இந்த

நட்சத்திர பஞ்சாங்க நுணுக்கங்கள் | SECRETS OF NAKSHATRAS & PANCHANGA PART 1

 திருடு போன பொருள் கிடைக்குமா ? மிருகசீரிஷம், ஆயில்யம், அஸ்தம், அனுஷம், உத்தி ராடம், சதயம், அசுவினி - இந்த ஏழு நட்சத்திரங்கள். இதில் தீவிர முயற்சிக்குப் பின் தவறிப்போன பொருட்கள் அல்லது திருட்டுப் போன பொருட்கள் திரும்பவும் கிடைக்கும்.  திருடு போன பொருள் இருக்கும் இடம் தெற்குப் பகுதியை குறிக்கும். அனுஷம், மகம், சித்திரை, கேட்டை, பூரட்டாதி, அபிசித், பரணி - இந்த ஏழு நட்சத்திரங்களில் தொலைந்த அல்லது திருட்டுப் போன பொருட்கள் காலதாமதமாக வெகு நட்களுக்குப் பிறகு - வெகு தூரத்தில் கிடைக்கும். திருடு போன பொருள் இருக்கும் இடம் மேற்குப்பகுதியைக் குறிக்கும். புனர்பூசம், பூரட்டாதி, சுவாதி, மூலம், திருவோணம், உத்திரட்டாதி, கார்திகை - இந்த ஏழு நட்சத்திரங்கள் தொலைந்துபோன பொருட்கள் அல்லது திருட்டுப் போன பொருட்கள் திரும்ப கிடைக்காது. திருடு போன பொருள் இருக்கும் இடம் வடக்குப்பகுதி குறிக்கும். புதிய வேலையில்  சேர்வதற்கான நல்ல காலம் எது ?  அஸ்தம், அஸ்வினி, பூசம், மிருகசீரிஷம், ரேவதி, சித்திரை, அனுஷம். இந்த நக்ஷத்திரங்களில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் சுபக்கிரகம் லக்னத்திலும், சூ