'கூஷ்மாண்டா' ரூபத்தில் நவராத்திரி நான்காம் நாள் துர்கையை வழிபடுவது வழக்கம். கூஷ்மாண்ட தேவிக்கு உரியது சிகப்பு வண்ணம். துர்கை அல்லது அம்பிகைக்கு சிகப்பு குங்குமம் இட்டும் சிகப்பு வண்ண மலர்கள் சாற்றியும், சிகப்பு துணி சாற்றியும் வழிபடுவது சிறப்பு. மேலும் சிகப்பு வண்ணம் உடலில் படும் வண்ணம் ஏதேனும் துணியை உடுத்தி வழிபடுவதும், சிகப்பு துணி, குங்குமம், மஞ்சள் மற்றும் தாம்பூலம் சுமங்கலிகளுக்கு அளிப்பதும்,பசு மாட்டிற்கு நெற்றியில் குங்குமம் இட்டு, செவ்வாழை பழம் கொடுப்பது மிகச்சிறந்தது. சுமங்கலிகளுக்கு சிகப்பு வண்ண கண்ணாடி வளையல்களும் கொடுக்கலாம். முடிந்தவர்கள் கோவிலில் அம்பிகைக்கு குங்கும அபிஷேகம் அல்லது அம்பிகை அர்ச்சனைக்கு குங்குமம் கொடுப்பதும் நன்று. இந்த நாளில் படிக்கட்டு கோலம் இடுவதும் (குங்குமம் கொண்டு) , அம்பிகைக்கு கூடுதலாக ஜாதி மல்லி பூ சாற்றுவதும் , கதம்ப சாதம் நிவேதனம் மற்றும் செவ்வாழை கொய்யா வைப்பதும் நிவேதனத்திற்கு சிறந்தது. சுமங்கலிகளுக்கும் ஜாதிமல்லி பூ வைத்து கொடுப்பது நல்லது.
கூறவேண்டிய மந்திரம் : ஓம் கூஷ்மாண்டாயை நமஹ
Nandri guruji
ReplyDeleteThanks guruji
ReplyDeleteThank you guruji
ReplyDeleteநமஸ்காரம் குருஜி!
ReplyDeleteSir which Devi we have to pray on 23 & 24 october
ReplyDelete