அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபட மற்றும் அனைத்து ராசி நட்சத்திரத்தினர் நோய்கள் நீங்க வழிபட வேண்டிய திருத்தலம், தினசரி கூற வேண்டிய அதீத சக்தி வாய்ந்த ஸ்தோத்திரம் முறையை வழங்கியுள்ளோம். வடமொழி தெரியாதோரும் எளிதாக கூறும் படி மந்திரத்தில் அர்த்தம் ஆற்றல் மாறாமல் கொடுத்துள்ளோம். அனைவரும் நோய்கள் நீங்க இந்த தத்தாத்ரேய ஶ்ரீதத்தமாலா மந்த்ர மாலையை 9 முறை வரலாம். வீட்டில் எவருக்கேனும் உடல்நிலைசரியிலாது அவர்கள் இதை கூற முடியாத சந்தர்ப்பம் இருப்பின் மற்றவர்கள் வீட்டில் விளக்கேற்றி பஞ்ச பாத்திர உத்திரணியில் (கடவுளுக்கு நீர் வைக்கும் டம்பளர்) ஒரு தர்பை குச்சியை முக்கியவாறு பிடித்து மந்திரம் ஜபித்து அந்த நீரை நோயுற்றவருக்கு சிறிது சிறிதாக கொடுக்கலாம். தினசரி பாத்திரம் கழுவி நீர் மாற்றினால் போதுமானது . ஒரே தர்பை குச்சியை ஒரு மாதம் வரை சுத்தமான இடத்தில வைத்து உபயோகம் செய்யலாம். நோய்கள் இல்லையென்றாலும், இதை தினசரி கூறி வருவது உடலையும் மனதையும் வஜ்ர தேகமாக மாற்றி அனைத்து வெற்றியையும் கொடுக்கும்.
ஶ்ரீதத்தமாலா மந்த்ர மாலை
ௐ நமோ பகவதே தத்தாத்ரேயாய, ஸ்மரணமாத்ரஸந்துஷ்டாய,
மஹாபயநிவாரணாய மஹாஜ்ஞானப்ரதாய, சிதானந்தாத்மனே
பாலோன்மத்தபிசாச வேஷாய, மஹாயோகினே அவதூதாய,
அனஸூயானந்தவர்தனாய அத்ரிபுத்ராய, ஸர்வகாமபலப்ரதாய,
ௐ பவபந்தவிமோசனாய, ஆம்ʼ அஸாத்யஸாதனாய,
ஹ்ரீம்ʼ ஸர்வவிபூதிதாய, க்ரௌம்ʼ அஸாத்யாகர்ஷணாய,
ஐம்ʼ வாக்ப்ரதாய, க்லீம்ʼ ஜகத்ரயவசீகரணாய ,
ஸௌ꞉ ஸர்வமன꞉க்ஷோபணாய, ஶ்ரீம்ʼ மஹாஸம்பத்ப்ரதாய,
க்லௌம்ʼ பூமண்டலாதிபத்யப்ரதாய, த்ராம்ʼ சிரஞ்ஜீவினே,
வஷட்வஶீகுரு வஶீகுரு, வௌஷட் ஆகர்ஷய ஆகர்ஷய,
ஹும்ʼ வித்வேஷய வித்வேஷய, பட் உச்சாடய உச்சாடய,
ட꞉ ட꞉ ஸ்தம்பய ஸ்தம்பய, கேம்ʼ கேம்ʼ மாரய மாரய,
நம꞉ ஸம்பன்னய ஸம்பன்னய, ஸ்வாஹா போஷய போஷய,
பரமந்த்ரபரயந்த்ரபரதந்த்ராணி சிந்தி சிந்தி,
க்ரஹாந்நிவாரய நிவாரய, வ்யாதீன் விநாசய விநாசய,
து꞉கம்ʼ ஹர ஹர, தாரித்ர்யம்ʼ வித்ராவய வித்ராவய,
தேஹம்ʼ போஷய போஷய, சித்தம்ʼ தோஷய தோஷய,
ஸர்வமந்த்ரஸ்வரூபாய, ஸர்வயந்த்ரஸ்வரூபாய,
ஸர்வதந்த்ரஸ்வரூபாய, ஸர்வபல்லவஸ்வரூபாய,
ௐ நமோ மஹாஸித்தாய ஸ்வாஹா .
தற்பொழுது அஸ்வினி நட்சத்திரத்தினர் செல்ல வேண்டிய கோவில் பற்றி பார்ப்போம்.இந்த கோவிலில் உள்ள தன்வந்திரியை வழிபடுவது அணைத்து வித வெற்றியையும் அஸ்வினி நட்சத்திரத்தினருக்கு கொடுக்கும். உடல் நிலை மேம்படுவது மட்டுமல்லாது,கடன் தீர, காரிய தடை நீங்க,வெற்றிகள் சேர,அதிர்ஷ்டம் பெருக, இவை வெகுவாக உதவும்.வருடம் ஒரு முறை அல்லது இரு முறை சென்று வரலாம். ஸ்ரீ ரங்க ரங்கநாத பெருமாள் கோவில் தான் அது. இதில் உள்ள தன்வந்திரி பகவானுக்கு வெகு சிறப்புகள் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்தினருக்கு அனைத்து வித பாதுகாப்பையும் தரும் அஸ்வினி நட்சத்திர அதிபதியான அஸ்வினி தேவர்கள் இங்கே வீற்றிருக்கும் தன்வந்திரியால் தான் அணைத்து வித குண நலன்களையும் பெற்று அஸ்வினி நட்சத்திர அன்பர்களை காத்து ரட்சித்து வருகின்றனர்.முதலில் விநாயகர் வழிபாடு முடித்து, ஸ்ரீ ரங்கநாதரை மற்றும் தாயாரை வணங்கியபின் இந்த தன்வந்திரி பகவானை வேண்டி வணங்கி 9 நெய் விளக்குகள் வெள்ளை திரியிட்டு ஏற்றி வைத்து வழிபட்டு பின் கோவிலின் பிரகாரத்தில் ஒன்றரை மணி நேரம் தியானித்து வந்தால் அனைத்திலும் வெற்றி அஸ்வனி நட்சத்திர அன்பர்களுக்கு. முடிந்தால் கோவில் குதிரைக்கு முடிந்த உணவு வழங்குவது மிகப்பெரிய சக்தியை அளிக்கும். ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவிலின் வெளியே பிச்சை புகுவோருக்கும் உணவளிப்பது நன்று. எப்பொழுது ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோவில் சென்றாலும் சரி வேறு யானைகள் இருக்கும் கோவிலுக்கு சென்றாலும் சரி, யானைகளுக்கு உணவும் யானை பாகனுக்கு சிறிது பணமும் கொடுத்து வாருங்கள். எக்காரணம் கொண்டும் யானையிடம் தலையினை கொடுத்து ஆசி வாங்குதல் கூடாது. அதே போல் எந்தவொரு கோவிலுக்கு சென்றாலும் கோவிலின் சிலைகளை, கொடி மரத்தை, சுற்றி இருக்கும் பலி பீடங்களை தொட்டு வணங்குதல்,மிகப்பெரும் பாவச்செயலாகும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கும் சந்ததியினருக்கும் நீங்கள் சந்திக்கும் எவருக்கும் இந்த ஒரு விஷயத்தினை எடுத்து கூறி புரிய வையுங்கள். பொதுவாக அஸ்வினி நட்சத்திரத்தினர் தங்களோடு குதிரைகள் நிறைந்த படத்தினை வைத்திருப்பது நன்மை தரும். வீட்டிலும் மற்றும் தொழில் செய்யும் இடத்திலும் படமாக அல்லது பொம்மைகளாக வைக்கலாம். படத்தை தங்களை கணினி மற்றும் மடிக்கணினி அல்லது மொபைல் போன் முன் படங்களாக வைத்திருப்பதும் நன்மை தரும். வெளியே எங்கு குதிரைகளை பார்த்தாலும் அவற்றிற்கு உணவு கொடுப்பதை அஸ்வனி நட்சத்திரத்தினர் கடைபிடிப்பது அவர்களுக்கு மேலும் நன்மையை தரும். பொதுவாக தினசரி அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் "ஓம் அஸ்வினி தேவாய நமஹ" மந்திரம் கூறி வரலாம். ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவிலின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் உங்களின் வசதிக்காக கொடுத்துள்ளோம்.
Sri Ranganatha Swamy Temple, Srirangam,Trichy
ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோவில், ஸ்ரீரங்கம்,திருச்சி
Phone : 0431 243 2246
Email : srirangam@tnhrce.org , srirangamtemple@gmail.com
பல்வேறு விதமான ஆன்மீக தாந்த்ரீக முறைகளை ஆங்கிலத்தில் அறிந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட இணையதளத்தில் காணலாம்.
https://www.occultremedies.com/
முக்கிய குறிப்பு : இந்த இணைய வலை தளத்தில் இருக்கும் பிரத்யேக பரிகாரங்கள் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. DMCA காப்பிரைட் சட்டத்தின் கீழ் வரும் ஒன்றாகும். இவற்றை காப்பி அடிப்பது மற்றும் தங்களின் யூ டியூப் சானலில் காப்பியடித்து போடுவது குற்றமாகும். தங்களின் சேனலும் வலை தளமும் நிரந்தரமாக முடக்கப்படும் அபாயம் உண்டு என்பதை அறிக.இந்த பூஜை முறையை செய்யும் அன்பர்கள் மற்றும் இதனால் பயன்பெறுவோர் தாங்கள் மேற்கண்டவற்றை வேறு எந்த சானலில் அல்லது வெப்சைட்டில் கண்டால் உடனடியாக தகவல் தந்து உதவவும்.
Ranga ranga .
ReplyDelete