வடுக பைரவர் அசுரன் ஒருவனை வதம் செய்ய குழந்தை (5 வயது)அவதாரம் எடுத்தவர். சிவனின் மறு அம்சம்.இந்த கலியுகத்தில் பல்வேறு பூஜை முறைகள் தொடர்ந்து நாம் செய்து வந்தாலும், வழிபாடு முறைகளை கடைபிடித்தாலும் எதிரிகளால் தொல்லை, பணப்பிரச்னைகள்,கடன் தொல்லை,குடும்பத்தில் நிம்மதியின்மை,பங்குதாரர்கள் மற்றும் பங்காளி சொத்து பிரச்சனைகள்,மேலும் எதிலும் காரிய தடைகள் இருந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.இப்படி செய்யப்படும் பல்வேறு விதமான பூஜைகளும்,வழிபாடுகளும் கண்டிப்பாக எதிர்காலத்தில் நமக்கு ஏற்பட கூடிய மேற்கண்ட விஷயங்களை பெருமளவில் குறைக்கும் என்பது உண்மை. மேலும் நாம் இருக்கக்கூடிய இல்லம்,நாம் செய்யக்கூடிய தொழில்,வியாபாரம் போன்ற விஷயங்களிலும் சிக்கல்களை நீக்கும். எனினும், இந்த கலிகாலத்தில் உடனடியாக பலனை அள்ளித்தரும் ஒரு சில தெய்வ சக்திகள் உள்ளன.எவர் ஒருவர் மிகுந்த உள்ளன்போடும் அதீத பக்தியோடும்,நம்பிக்கையோடும் தங்களை வழிபடுகிறார்களோ அவர்களை உடனே ரட்சிக்க புறப்படுபவர்கள் நரசிம்மர்,வராஹி,பைரவர் போன்றவர்கள்.இதில் பைரவரை வடுக பைரவராக பூஜிக்க தொடங்கினால்,பலன் உடனடி. ஏன் ?? சிறு குழந்தையின் உள்ளத்தை கொண்ட வடுக பைரவர், தன்னை நாடி வருகின்ற இவரின் துன்பங்களையும் பார்த்து கொண்டு இருப்பதே இல்லை.இவரை தினசரி வழிபடலாம். அஷ்டமி தோறும் மிக நிச்சயமாக இவரை வழிபட்டு வந்தால் கண்டிப்பாக நம் அணைத்து வித துன்பங்களும் ஒரு முடிவிற்கு வரும் என்பதில் சந்தேகமேயில்லை. மேலும் இந்த சிறு தெய்வ குழந்தையுடன் எப்பொழுதும் தச மஹா தேவியரான பரம சக்தி வாய்ந்த 3 தேவிகள் உடனிருப்பர். அவர்கள் காளி, தாரா தேவி மற்றும் சின்னமஸ்தா. வடுக பைரவரை வழிபட மற்ற மூன்று தேவியாரையும் சேர்த்து வழிபாடு செய்த பலனும் அவர்களிடமும் முறையிட்ட திருப்தியும் கிடைக்கும் அல்லவா? இங்கே வடுக பைரவரை வழிபாடும் எளிய முறையை வழங்கியுள்ளேன். வேறு விதமாக வழிபாடு செய்ய வசதியுள்ளோர் எமது ஆங்கில இணையதளத்தில் சென்று பார்த்து கொள்ளவும். பலன்களை பொறுத்த வரை பெரிய வேறுபாடு ஏதுமில்லை. ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளதில் விநாயகர் பூஜை முறை விளக்கப்படவில்லை.தாந்த்ரீக முறை மட்டுமே கொடுத்துள்ளோம். கீழே கொடுத்துள்ளதை அஷ்டமி அன்று தொடங்கலாம். முடியாதோர் ஞாயிறு தொடங்கி எட்டு நாட்களில் முடித்து பின்னர் தினசரி மந்திரம் மட்டும் சொல்லி வரலாம்.
துன்பங்கள் தீர, கடன்கள் அடைய, பணம் சேர,பணம் வர,அதிர்ஷ்டம் பெருக இவரின் பூஜை முறையை செய்யலாம்.
ஆங்கிலத்தில்: https://www.occultremedies.com/
பூஜை முறை :
விளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி. பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு) பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள் மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு ,சுண்ணாம்பு மற்றும் அவைகளை வைக்க கிண்ணங்கள் ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு. பஞ்ச பாத்திரம், உத்தரினி. மாக்கோலம் போட தேவையான பொருட்கள்.
பூஜை அறையில் கொடுக்கப்பட்டுள்ள படத்தை தரவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்.இல்லையெனில், விளக்கினை வடுக பைரவராக ஏற்று கொண்டு (கருந்திரி அல்லது சிகப்பு திரி) நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்கவும்.
பூக்களை பொறுத்தவரை நீலநிற சங்குப்பூக்கள் மிக நன்று. படம் வைத்து பூஜை செய்வோர்,படத்திற்கு தகுந்தாற்போல் முழு முந்திரியில் துளையிட்டு நீலநிற சுத்தமான நூலில் மாலையாக கட்டி படத்திற்கு இடவும். நைவேத்தியங்கள் முடிந்ததை செய்யவும்,பாயசம் கட்டாயம். முதல் முறை தொடங்குவோர் மஞ்சளில் விநாயகர் பிடித்து வைத்து,அருகம்புல் இட்டு, "ஓம் கம் கணபதயே நமஹ" மந்திரத்தினை 11/27/54/108 என முடிந்ததை கூறலாம். பின்னர் முதல் முறை தொடங்குவோர் மஞ்சளில் விநாயகர் பிடித்து வைத்து,அருகம்புல் இட்டு, "ஓம் கம் கணபதயே நமஹ" மந்திரத்தினை 11/27/54/108 என முடிந்ததை கூறலாம். பின்னர் விநாயகரிடம் இந்த பூஜை முறையும் வேண்டுதல்களும் கண்டிப்பான முறையில் பலன் தர வேண்டும், மற்றும் எவ்வித தடங்கல்களும் வந்துவிட கூடாது என வேண்டுதல் செய்யவும். நாம்,வழக்கமாக கூறிவருவது போல் குடும்ப சகிதம் செய்து வருவதும்,தரையில் அமராமல் ஏதேனும் விரிப்பில் அமர்வதும் நன்று. அசைவம் கண்டிப்பாக பூஜை நாட்களில் தவிர்க்க வேண்டும்.வேறு எவ்வித கட்டாயமும் இல்லை.விநாயகர் வேண்டுதல் முடிந்ததும் சிறு விநாயக பூஜை செய்யவும். இங்கே முக்கிய விஷயம் ஒன்றை அனைவரும் கவனிக்க வேண்டும். இந்த லகு பூஜை முறை அஷ்டமி நாளில் அல்லது ஞாயிறு முதல் எட்டு நாட்கள் தொடங்கும் பொழுது மட்டுமே. பிறகு, தினசரி அவரின் மந்திரத்தை முடிந்த அளவு கூறி வந்தால் போதும். இப்படி பூஜைகள் செய்ய முடியாத நிலையில் இருப்போர் கடைசியாக கொடுத்துள்ள மன்பத்திரத்தை தினசரி கூறி ஏதேனும் திராட்சை அல்லது கற்கண்டு நிவேதனம் செய்யவும். பூஜை முறையை கையாள்வோருக்கு மட்டுமே அசைவம் தவிர்த்தல் எனும் விஷயம்.நம் சிரத்தையை பொறுத்து தான் நமக்கு பலன்களும் வரும் என்பதை அனைவரும் அறிக.
விநாயகர் பூஜை:
கணபதி பூஜை ஓம் சுமுகாய நம: | ஓம் ஏகதந்தாய நம: | ஓம் கபிலாய நம: | ஓம் கஜகர்ணாய நம: | ஓம் லம்போதராய நம: | ஓம் விகடாய நம: | ஓம் விக்னராஜாய நம: | ஓம் விநாயகாய நம: | ஓம் தூமகேதவே நம: | ஓம் கணாத்யக்ஷாய நம: | ஓம் பாலசந்த்ராய நம: | ஓம் கஜானனாய நம: | ஓம் வக்ரதுண்டாய நம: | ஓம் சூர்ப்பகர்ணாய நம: | ஓம் ஹேரம்பாய நம: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: | ஓம் ஸித்திவிநாயகாய நம: | அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: நானாவித பரிமள பத்ர புஷ்பாணி சமர்பயாமி
அடுத்தது வடுக பைரவ லகு பூஜை. சிறிதளவு (உள்ளங்கையளவு) பச்சரிசியை தயாராக வைத்து கொள்ளவும். வடுக பைரவரை மனதளவில் நன்றாக பிரார்த்தனை செய்து உங்கள் தேவைகளை சங்கல்பம் (வேண்டுதல்) செய்து கொள்ளவும். பின்னர் கீழ்கண்ட மந்திரத்தை 54 அல்லது 108 முறை கூறவும்.
பகத்யாய நமாமி பாதுகம் தருணாம், த்ரிநேத்ரம்,காம் ப்ரதான் வர் கபால திரிசூல தண்டான்
பக்தாத்திரி நாச காரனே தததாம் கரேஷு,தம் கோஸ்துபா பரான் பூஷித திவ்ய தேஹம்
கூறி முடித்தும், மேலும் ஒரு முறை கையில் பச்சரிசியை வைத்து கொண்டு தங்களின் பிரார்த்தனைகளை கூறி தங்களின் தலையை இடம் வளமாக அரிசி கையினால் சுற்றி, உங்களை சுற்றி எரிந்து பல திக்குகளில் எறியவும். (வீடுகளில் இவற்றை பூஜை முடிந்ததும் சுத்தம் செய்து கொள்ளலாம். குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும்,பூஜிப்பவர் இவ்வாறு செய்ய விரும்பினால் செய்து விட்டு,பின்னர் தனக்கும் சுற்றி கொள்ளலாம்.
முடிவாக,கீழ்கண்ட மந்திரத்தை
ஓம் ஹ்ரீம் பாதுகே ஆபத் உத்தரானாய குறு குறு பாதுகே ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா
3 முறை கூறி பூஜையை முடித்து, நிவேதனம் செய்து,தூப தீபம் காட்டி நமஸ்கரித்து பூஜையை முடிக்கவும். தொடர்ந்து 8 நாட்கள் செய்வோர், 9 ஆம் நாள் படத்திற்கு தூப தீபம் காட்டி 3 முறை கூறவேண்டிய மந்திரத்தை மட்டும் 3 முறை கூறி மாரு பூஜையினை முடித்து கொள்ளவும். பின்னர் தினசரி கூற வேண்டிய மந்திரத்தை முடிந்த அளவு கூறி வரலாம்.
முக்கிய குறிப்பு : இந்த இணைய வலை தளத்தில் இருக்கும் மேற்கண்ட முறை ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. DMCA காப்பிரைட் சட்டத்தின் கீழ் வரும் ஒன்றாகும். இவற்றை காப்பி அடிப்பது மற்றும் தங்களின் யூ டியூப் சானலில் காப்பியடித்து போடுவது குற்றமாகும். தங்களின் சேனலும் வலை தளமும் நிரந்தரமாக முடக்கப்படும் அபாயம் உண்டு என்பதை அறிக.இந்த பூஜை முறையை செய்யும் அன்பர்கள் மற்றும் இதனால் பயன்பெறுவோர் தாங்கள் மேற்கண்டவற்றை வேறு எந்த சானலில் அல்லது வெப்சைட்டில் கண்டால் உடனடியாக தகவல் தந்து உதவவும்.
நன்றி குருஜி
ReplyDelete