திருடு போன பொருள் கிடைக்குமா ?
மிருகசீரிஷம், ஆயில்யம், அஸ்தம், அனுஷம், உத்தி ராடம், சதயம், அசுவினி - இந்த ஏழு நட்சத்திரங்கள். இதில் தீவிர முயற்சிக்குப் பின் தவறிப்போன பொருட்கள் அல்லது திருட்டுப் போன பொருட்கள் திரும்பவும் கிடைக்கும்.
திருடு போன பொருள் இருக்கும் இடம் தெற்குப் பகுதியை குறிக்கும்.
அனுஷம், மகம், சித்திரை, கேட்டை, பூரட்டாதி, அபிசித், பரணி - இந்த ஏழு நட்சத்திரங்களில் தொலைந்த அல்லது திருட்டுப் போன பொருட்கள் காலதாமதமாக வெகு நட்களுக்குப் பிறகு - வெகு தூரத்தில் கிடைக்கும். திருடு போன பொருள் இருக்கும் இடம் மேற்குப்பகுதியைக் குறிக்கும்.
புனர்பூசம், பூரட்டாதி, சுவாதி, மூலம், திருவோணம், உத்திரட்டாதி, கார்திகை - இந்த ஏழு நட்சத்திரங்கள் தொலைந்துபோன பொருட்கள் அல்லது திருட்டுப் போன பொருட்கள் திரும்ப கிடைக்காது. திருடு போன பொருள் இருக்கும் இடம் வடக்குப்பகுதி குறிக்கும்.
புதிய வேலையில் சேர்வதற்கான நல்ல காலம் எது ?
அஸ்தம், அஸ்வினி, பூசம், மிருகசீரிஷம், ரேவதி, சித்திரை, அனுஷம். இந்த நக்ஷத்திரங்களில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் சுபக்கிரகம் லக்னத்திலும், சூரியன், செவ்வாய் 10-11-லும் இருக்கும் காலத்தில் புதிய வேலையில் சேர்வதற்கான நல்ல காலம்.
வங்கியில், ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் முதலீடு செய்ய, L.I.C. பாலிசி எடுக்க மற்றும் எவ்வித முதலீடும் செய்யக்கூடிய முகூர்த்த நேரம் எது?
சுவாதி, புனர்பூசம், ரேவதி, சித்திரை, அனுஷம், விசாகம், பூசம், திருவோணம், அவிட்டம். இந்த நக்ஷத்திரங்களில் லக்னம் சராசரியாகவும், லக்னத்திற்கு 5-8-9-இல் கிரகமில்லாமலும் இருக்க அமைந்த காலத்தில் வட்டிக்குக் கடன் கொடுக்கலாம். வங்கியில், பைனான்ஸ் கம்பெனியில் முதலீடு செய்யலாம் எல்ஐசியில் புதிய பாலிசி எடுக்கலாம்.
கடன் தீர்க்க உகந்த நாள் நட்சத்திரம் எது? கடன் எந்த நாளில் வாங்கவே கூடாது?
புதன்கிழமையில் யாருக்கும் பணம் கடன் கொடுக்கக்கூடாது.செவ்வாய்க்கிழமையில் யாரிடமும் பணம் கடன் வாங்கக்கூடாது. அஸ்த நட்சத்திர ஞாயிற்றுக்கிழமையில் கடன் வாங்கினால் அந்தக் கடனை அடைக்க இயலாது. அக்கடன் தொடர்ந்து காலம் காலமாக இருந்துகொண்டே இருக்கும். பணம் வசூல் செய்வதற்கு ஏற்ற நாள் புதன்கிழமையே.
அனைத்து வித கலைகளும் பயில, நடனம் பயில வித ஏற்ற காலம் எது ?
பூராடம், மகத்தை நீக்கி மீதி உள்ள நட்சத்திரங்களில் புதன் லக்னத்திலும், சந்திரன், மிதுனம், கன்னியில் இருந்து 4-ஆம் பாவத்தில் சுபர் இருக்கும் காலம் ஏற்ற காலமாகும்.
கிணறு போர் வெல் மற்றும் குளம் வெட்டும் காலம் எது ?
சிறிய கிணறு அல்லது வீட்டில் போர்வெல் அமைக்க ஏற்ற நட்சத்திரம்:- சுவாதி, அஸ்விணி, பூசம், அஸ்தம், புனர்பூசம், ரேவதி, சதய நட்சத்திரங்களில் வீட்டில் கிணறு வெட்ட அல்லது போர்வெல் அமைக்க ஏற்ற நட்சத்திரங்களாகும்.
பெரிய கிணறு அல்லது தோட்டம், பண்ணை, வயல்களில் கிணறுவெட்ட,குளம் அமைக்க, போர்வெல் அமைக்க ஏற்ற காலம்:-அவிட்டம், சதயம், அனுஷம், மகம், உத்திரம், உத்திராடம், உத்திராட்டாதி இந்த நட்சத்திரங்களில் தோட்டம், பண்ணை, வயல்களில் புதிய கிணறு வெட்டவும், கிணற்றில் போர்போடவும் புதிய போர்வெல் அமைக்கவும் ஏற்ற நட்சத்திரங்களாகும்.
விவசாயம் உழவு செய்ய ஏற்ற நட்சத்திரம் திதி மற்றும் லக்கினங்கள்
உழவு விவசாயம் செய்ய ஏற்ற காலம்:- வருடத்தில் முதலில் உழவு செய்வதற்கான காலம் : மூலம், விசாகம், மகம், சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, ரோகிணி, மிருகசீரிஷம், ரேவதி, சித்திரை, அனுஷம், ஹஸ்தம், அஸ்வினி, பூசம். இந்த நட்சத்திரங்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன், செவ்வாய், சனி பலமற்றும், சந்திரன் நவாம்சத்தில் நீர் ராசியிலும், சுக்கிரனும் சந்திரனும் பலம் பெற்றும், குரு லக்னத்திலும் இருக்கும் காலம் முதல் உழவு செய்ய ஏற்ற காலமாகும்.
விவசாயத்தில் இழப்பு ஏற்படும் காலம்:லக்னம் -
சிம்மம், கும்பம், கடகம், மேஷம், துலாம்
திதி : திரிதியை, சஷ்டி, நவமி, சதுர்த்தசி, திதிகளில் முதல் உழவை ஆரம்பித்தால் அதில் இழப்பு ஏற்படும்.
முதலில் விதைவிதைக்க உகந்த காலம்:- மூலம், மகம், சுவாதி, அவிட்டம், உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி, ரோகிணி, மிருகசீரிஷம், ரேவதி, சித்திரை அனுஷம், ஹஸ்தம், அஸ்வினி, பூசம் இந்த நட்சத்திரங்களில், திங்கட்கிழமை, புதன், வியாழன் வெள்ளிக்கிழமைகளில், ராகு இருக்கும் நட்சத்திரத்திற்கு 3-வது நட்சத்திரத்தில் விதைவிதைக்க ஏற்ற காலமாகும். சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 3-8-9-வது நட்சத்திரமும் விதைவிதைக்க ஏற்ற நட்சத்திரமாகும். சஷ்டி திதி உழவு செய்யவும், விதைவிதைக்க ஏற்ற திதியல்ல.
ரத்த தானம் செய்ய ஏற்ற காலம் எது ?
இரத்ததானமும் மிக சிறந்த தானமாகும். ஒருவருக்கு உயிர் கொடுப்பதற்கு உதவுவதால் சிறந்த தானமாகும். இரத்தம் தானத்தில் உடல் நலம் பாதிப்பதில்லை. இரத்தம் கொடுப்பதால் அதற்கேற்ற அளவே இரத்தமும் கூறி விடுகிறது.இரத்த தானம் செய்வது ஒருவருக்கு உயிர் கொடுப்பதற்கு சமமாகும். கொடுத்துள்ள நட்சத்திரங்கள் மற்றும் ரத்த தானம் செய்வதால் மிக பெரிய நற்கர்ம பயன் உண்டாகும்.ஜோதிட ரீதியாகவும் ரத்த தானம் கொடுப்பது ஒருவித சூட்சும பரிகாரமாகும். சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரோகிணி, மிருகசீரிஷம், சதயம், அஸ்தம், அஸ்விணி, பூசம். இந்த நட்சத்திரங்களிலும் மற்றும் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் செய்யலாம்.
வயிற்றை சுத்தம் செய்யும் சூட்சும ஜோதிட பரிகாரம்
வயிறு சுத்தமாக இருந்தால் தான் வாழ்க்கை சுத்தமாக இருக்கும். உடல் ரீதியாகவும் ஆயுர்வேத ஜோதிட அடிப்படையிலும் வயிற்றை சுத்தமாக வைத்து கொள்வதால் பல வித கிரக பாதிப்புகளில் இருந்து தப்பலாம். சூட்சுமம் நிறைந்த இந்த ஜோதிட பரிகார விஷயத்தை பல ஜோதிடர்கள் கூறுவதற்கு தவறி விடுகிறார்கள்.சனிக்கிழமை, புதன்கிழமைகளில் மற்றும் சித்திரை, சுவாதி,அனுஷம், கேட்டை,ரோகிணி, மிருகசீரிஷம், சதயம், அஸ்தம், அஸ்வினி, பூசம். இந்த நட்சத்திரங்களிலும் இந்த வயிற்றை சுத்தம் செய்வதற்கு மருந்து அருந்தலாம்.செவ்வாய், வியாழக்கிழமைகளில் செய்யலாம்.
வீட்டில் வியாபாரத்தில் தானியங்களை சேமிக்க உகந்த காலம்
உத்திரம்,உத்திராடம், உத்திரட்டாதி, ரோகிணி, பூசம், விசாகம், கேட்டை,அஸ்வினி, சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம் நட்சத்திரங்களில், கடகம், மேஷம், துலாம் இந்த
லக்னங்கள். மேற்கண்ட நட்சத்திரங்களில் கடகம், மேஷம், இந்த
லக்னங்கள் தவிர மற்ற லக்னங்களில் திங்கட்கிழமை, புதன்,
வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தானியங்களை
சேமிப்புக் கிடங்கில் வைப்பது தானியங்களும் கெட்டுப்
போகாமல், எலி, பூச்சிகளுக்கு இரையாகாமல் நல்ல நிலையில்
இருக்கும். அதிக விலைக்கும் விற்பனையாகும்.இது வியாபாரிகளுக்கான நுண்ணிய ஜோதிட சூட்சும பரிகாரமாகும்.
இறைவனின் சக்தி பெற மந்திர சித்தி பெற பூஜை ஆரம்பிக்கும் காலம் எது?
மூலம், அனுஷம், பரணி, மகம், மிருகசீர்சம். இந்த
நட்சத்திரங்களில் லக்னமாகவும், சுக்கிரன் புதன் லக்னத்திலும் 4 லும், 8-ஆம் இருந்து பாவத்தில் அது கிரகங்கள் கும்பஇல்லாமல் இருக்கும் காலத்தில் இறை அருள்பெற, சித்திபெற
பூஜை ஆரம்பிக்க ஏற்ற காலமாகும். இந்த காலத்தில் செய்யப்படும் பூஜைகள் மற்றும் மந்திர உபாசனையில் நூறு சதவீதம் பலன் தரும் என்பது கண்கூடு.
உடல்நிலை குணமாகி வீட்டுக்கு வரும் காலம்:-
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவம் குணமாகி வீடு திரும்பும் காலம் மிக முக்கியமான ஒன்றாகும். சில தகாத கால வேளைகளில் வீடு திரும்புவது மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தலாம். ஆகவே இதில் மிகுந்த கவனம் தேவை. தகுந்த ஜோதிட அல்லது பஞ்சாங்க நிபுணரின் ஆலோசனை பெற்று செயல்படுத்தினால் பணவிரயம் மற்றும் மனக்கஷ்டங்கள் ஏற்படும் தவிர்க்கலாம்.
ரேவதி, புனர்பூசம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, ரோகிணி, மகம், சுவாதி, ஆயில்யம். இந்த நக்ஷத்திரங்களில் - சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி திதிகளில், சர லக்னங்களில் வெள்ளிக்கிழமைகளில் சந்திரன் 4-8-12-இல் இருந்து, பாவிகள் கேந்திரம்திரிகோணங்களில்-11-இல் இருக்கும் காலம் மருத்துவமனையில் இருந்து குணமாகி வீட்டுக்கு வர உகந்த காலமாகும்.
Comments
Post a comment