நல்ல காரியங்கள் துவங்க ஏற்ற லக்னம்:
பிறந்த லக்னத்திற்கு 3-6-10-11-ஆக அமைத்துக் கொள்ளும்
லக்னத்தில், அதற்கு 8-12-இல் எந்த கிரகங்களும் இல்லாமலும்,
சுபர் லக்னத்தில் இருந்தாலும், பார்த்தாலும், சந்திரன்
3-6-10-11-இல் இருக்கும் காலம் நல்ல காரியங்கள் துவங்க ஏற்ற
காலமாகும். சுவர்கள் 1-4-7-10-8-12-லும், பாவிகள் 3-6-11-லும்,
குரு, சுக்கிரன் கேந்திரம்-கோணத்திலும் இருக்கும் காலமும்
நல்ல காரியங்கள் துவங்க மிக உகந்த காலங்களாகும்.
வியாதிகள் தோன்றும் காலத்தால் ஏற்படும் பலன்கள்:
சுவாதி, அஸ்த்தம், பூரம், பூராடம், பூரட்டாதி, ஆயில்யம்,
அனுஷம். இந்த நட்சத்திரங்களில் பெரிய வியாதிகள்
தோன்றினால் அவ்வியாதியால் மாரகத்திற்கு நிகரான துன்பம் உடலளவிலும் மனதளவிலும் ஏற்பட வாய்ப்பு.
ரேவதி, அனுஷம் இந்த நட்சத்திரங்களில் காய்ச்சல்
தோன்றினால் குணமாக நீண்ட காலமாகும்.
பரணி, திருவோணம், சதயம், சித்திரை இந்த நட்சத்திரங்களில்
வியாதி தோன்றினால் வியாதி குணமாக 11 நாட்களாகும்.
விசாகம், கார்த்திகை, அஸ்வினி இந்த நட்சத்திரங்களில்
வியாதி தோன்றினால் வியாதி குணமாக 9 நாட்களாகும்.
உத்திராடம், உத்திரட்டாதி, பூசம், புனர்பூசம், ரோகிணி இந்த
நட்சத்திரங்களில் தோன்றினால் 7 நாட்களாகும் வியாதி குணமாக.
மிருகசீர்சம், உத்திரம் இந்த நட்சத்திரங்களில் தோன்றினால்
வியாதி குணமாக ஒரு மாதமாகும்.
பரணி, ஆயில்யம், மூலம், கார்த்திகை, விசாகம், அனுஷம்,
மகம் இந்த நட்சத்திரங்களில் பாம்பு கடித்தால் அதில் மாரகத்திற்கு நிகரான துன்பம் ஏற்படும்.
அனுஷம், ஆயில்யம், அஸ்த்தம், சதயம், பரணி, பூரம், பூராடம், பூரட்டாதி, விசாகம், அஷட்டம், கார்த்திகை இந்த
நட்சத்திரங்களில், ஞாயிறு, செவ்வாய்க்கிழமை, சனிக்
கிழமைகளில் சதுர்தி, நவமி, சதுர்த்தசி, துவாதசி, சஷ்டி இந்த திதிகளில் வியாதி தோன்றினால் அதில் மாரகத்திற்கு நிகரான துன்பம் ஏற்படும்.
முக்கிய குறிப்பு : மேற்கூறிய விஷயங்களை பற்றி ஒன்று மிக முக்கியமாக கூற வேண்டி உள்ளது. இவை பண்டைய நூல்களில் கொடுக்கப்பட்டு வந்துள்ளதாகும்.வியாதி ஏற்பட்ட நபரின் தன்மை, ஜாதக நிலை, நடப்பில் இருக்க கூடிய தசா புத்தி போன்றவை மேற்கூறியுள்ள விஷயங்களை தாண்டி செயல்படும் தன்மையுள்ளவை.ஆகையால் மேற்கூறியுள்ள விஷயத்தை ஒரு ஜாக்கிரதை உணர்வாக மட்டுமே எடுத்து கொண்டு செயல்பாடுதான் இந்த கலிகாலத்தில் புத்திசாலித்தனமான ஒன்றாகும். அதை விடுத்து அதை பற்றியே நினைத்து கவலை கொள்வது மற்றும் வேண்டாத எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லதல்ல. பண்டைய கிரந்தங்களில் கொடுத்துள்ளவை அனைத்தையும் தற்காலத்தில் விழிப்புணர்வை வளர்த்து கொண்டு செயல்படுவதற்காக மட்டுமே பயன்படுத்தவும்.
உடல் உறவு கொள்ள (குழந்தை செல்வம் பெற) ஏற்ற நாட்கள்:-
கீழ்க்கண்டநட்சத்திரங்களில் உடல் உறவு கொள்வதால் குழந்தை
உண்டாவதற்கான நாட்களாகும்.
திதி, நட்சத்திர, லக்ன கண்டாந்தங்களில் உடல்உறவு
கொள்வது கூடாது.
கணவன், மனைவியின் பிறந்த நட்சத்திரத்திற்கு 3-5-7-, 12, 14,16, 21, 23, 25-வது நட்சத்திரங்களைத் தவிர்க்க வேண்டும்.
கணவன், மனைவியின் ஜென்ம நட்சத்திரம் தவிர்க்க
வேண்டும்.
கிரகணம் ஏற்படும் நாட்களில் உடல் உறவு கொள்வது கூடாது.
(சந்திர கிரகணம், சூரிய கிரகணம்). பெற்றோர்களின் திதி வரும் நாட்களையும் தவிர்க்க வேண்டும்.{இதை கண்டிப்பாக கடைபிடிக்கவும்}
பகலில் உடல்உறவு கொள்வது கூடாது. கணவன், மனைவியின் சந்திராஷ்டம நாட்களையும் நட்சத்திர நேரங்களையும் தவிர்க்க வேண்டும். (ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களின் கிரகண ரகசியங்கள் புத்தகத்தில் சந்திராஷ்டம முறை கணக்கிடுவது பற்றி குறிப்பிட்டுள்ளார்.இது கட்டணமின்றி கொடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்கள் வாங்கி பயன் பெறலாம்)
உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீர்சம், அஸ்த்தம், அனுஷம், ரோகிணி, சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம். இந்த நட்சத்திரங்கள் உடல்உறவு கொள்ள ஏற்ற நட்சத்திரங்களாகும்.
ஆண் குழந்தை வேண்டுமென்றால் ஆண் ராசி லக்னமாக
வரும் காலம் ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் உடல் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும். பெண் ராசி லக்னமாக
வரும் காலம், திங்கட்கிழமை, வியாழன், வெள்ளிக்கிழமைகளில்
உடல் உறவு கொண்டால் பெண் குழந்தை பிறக்கும். மென்ஸெஸ்
நின்றபின் வரும் 16 நாட்களுக்குள் ஒற்றைப்படையாக வரும்
நாட்களில் உடல் உறவு கொள்வதால் ஆண் குழந்தை பிறக்கலாம்.
சுபக்கிரகங்கள் 1-4-7-10-லும், அல்லது 5-9-லும் பாவிகள்
3-6-11-லும் லக்னத்தை ஆண் கிரகங்கள் (சூரியன், செவ்வாய்
குரு பார்த்தாலும் இருந்தாலும், சந்திரன், லக்னமும் அந்த
நாளில் ஆண் ராசியில் இருக்கும் போது உடலுறவு
கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.
குறிப்பு : அந்த காலத்தில் ( பெரும்பாலும் சுமார் 50 வருடம் முன்பு வரை) ஒவ்வொரு குடும்பத்திலும் ஆன் மட்டுமே வீட்டை நடத்தும், வருமானத்திற்கு உரியவர் அகா இருந்தார்.ஒவ்வொரு வீட்டிலும் 6-10 குழந்தைகள் வரை இருக்கும். வம்ச விருத்தியை மிக முக்கியமாக கருதி வந்தது மட்டுமல்ல, அனைவரும் குடும்ப தலைவருக்கு கட்டுப்பட்டு கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். பல விஷமிகள் தொடர்ந்து பரப்பி வந்த செயல்களால் அவை உடைய ஆரம்பித்தன. முன் காலங்களில் மிக பெரிய பணம் படைத்தோர் ஜமீன்தார்கள் மன்னர்கள் போன்றோர் போகத்திற்காக பல பெண்டிருடனும் கூடுவர். அதே சமயம் குடும்ப மக்கள் அப்படி இல்லை. அதனால் அவர்கள் வாரிசுக்காக உடல் உறவு கொள்ளும் சமயம் ஒவ்வொரு முறையும் பெரும்பாலும் நாள் நட்சத்திரம் நேரம் பார்ப்பது அவர்கள் வாழ்க்கை முறையாக இருந்தது. தற்காலத்தில் ஒரு குழந்தை பெற்று வளர்பதற்கே பலர் திண்டாடுகின்றனர்.பலருக்கு இரவில் வேலை என்ற அமைப்பு.ஆன் பெண் பாகுபாடு இல்லாமல் அனைவரும் உழைக்கின்றனர்.குடும்ப அமைப்பு என்பதை தாண்டி பணம் வசதி போன்றவை மிக பிரதானமாகி விட்டது.ஆகவே மேற்கூறியவற்றை முடிந்த வரை குழந்தை செல்வத்திற்க்காக இணையும் சமயம் நினைவில் கொண்டு இணைந்தால்,வர இருக்கும் சந்ததி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
சீமந்தம் செய்ய ஏற்ற நாட்கள்:-
சீமந்தம் செய்ய ஏற்ற நாட்கள் செவ்வாய், வியாழன், ஞாயிறு.
சீமந்தம் செய்ய ஏற்ற நட்சத்திரம் மிருகசீர்சம், மூலம், பூசம்
திருவோணம், புனர்பூசம், அஸ்தம்.
சீமந்தம் செய்ய ஏற்ற திதிகள்:
பிரதிமை, துவிதிகை, திருதிகை,
பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரியோதசி வளர்பிறையாக
இருப்பது அவசியம்).
அந்த நாளில் அந்த லக்னத்திற்கு கேந்திர-திரிகோணத்தில்
சுபரும், பாவிகள் 3-6-11-லும், லக்னமும், நவாம்ச லக்னம்,
ஆண் ராசியிலும் அமைவது நன்மை தரும். சிறப்பான நட்சத்திரம்
உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதியாகும். சீமந்தம்
செய்வதற்கு கர்ப்பம் தரித்த 6-வது மாதம் செய்வது
சிறப்புடையதாகும் என்பது உளநூல் ஆசிரியரான சுக்கிர
கீர்த்தியின்கூறியுள்ளதாகும்.
கர்ப்ப காலமும் அதன் ஆளும் கிரகங்களும்:
முதல் மாதம்-சுக்கிரன் ஆளும் கிரகமாகும்
2-வது மாதம்-செவ்வாய் ஆளும் கிரகமாகும்.
3-வது மாதம்-குரு ஆளும் கிரகமாகும்.
4-வது மாதம்-சூரியன் ஆளும் கிரகமாகும்.
5-வது மாதம்-சந்திரன் ஆளும் கிரகமாகும்.
6-வது மாதம்-சனி ஆளும் கிரகமாகும்.
7-வது - மாதம் முதல் புதன் ஆளும் கிரகமாகம்
8-வது மாதம் - லக்னாதிபதி ஆளும் கிரகம் ஆகும்.
9-வது மாதம் - சந்திரன் ஆளும் கிரகம் ஆகும்.
10-வது மாதம் சூரியன் நாளும் கிரகமாகும்.
(அதாவது 270 நாட்களுக்குப் பிறகு)
கர்ப்பமான கால முதல் அதாவது குழந்தை உருவான
காலமுதல் 270 நாட்களுக்குப் பின் அதாவது ஒரு வாரம் முன்பின் நிச்சயம் பிறந்துவிடும் 263-லிருந்து 277 நாட்களுக்குள் பிரசவம்
ஆகிவிடும்)
திருமணமாகும் காலத்தில் அதாவது தாலிகட்டும் நேரத்தில் பெண்ணிற்கு சந்திர பலமும், பிறந்த நட்சத்திரத்திற்கு 3-5-7-இல் வராத நாட்களாக பார்த்து அமைக்க வேண்டும்.
ஜென்ம ராசிக்கு சந்திரன் 6-8-12-இல் மறையாமல் அம்சத்திலும் பலம் பெற்றிருப்பது அவசியம்.
இதேபோன்று கர்ப்ப காலத்திலும் கரு உருவாகும் காலத்திலும்,
பிரசவம் ஆகும் காலத்திலும், பெண்ணின் சந்திரன் பலமாக கோசாரத்தில் அமைய வேண்டும். அப்பொழுதுதான் திருமண
வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும், சுகப்பிரசவமாகவும்
அமையும்.
Comments
Post a comment