பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் நாள்:
குழந்தை பிறந்த 11-12-வது நாட்களில், மிருக சீர்சம், ரேவதி, சித்திரை, அனுஷம், உத்திரம், உத்திரட்டாதி, உத்திராடம், ரோகிணி, அஸ்த்தம், அஸ்வினி, பூசம், சுவாதி, புனர்பூசம், திருவோணம்,அவிட்டம், சதயம்-இந்த 16 நட்சத்திரங்களில், சதுர்தி, சதுர்தசி திதிகளில் பெயர் சூட்டலாம்.
பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுமுன் செய்ய வேண்டியவை:
அக்குழந்தையின் பெற்றோர்கள் சிறு, தங்கத்தால் ஆன சிறு
கூரில்லாத ஆணியால் ' ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை அதன் நாக்கில் எழுதல் வேண்டும்.
காதில்கிருஷ்ண கிருஷ்ணா, ராம ராமா ,நமசிவய நமசிவய போன்ற மந்திரங்கள் மற்றும் குலதெய்வ பெயரையும் மும்முறை கூறலாம். பெயர்சூட்டும் நிகழ்ச்சி சூரிய உதயத்திற்குப் பின் நண்பகலுக்கு முன்நல்ல முகூர்த்தத்தில் செய்தல் அவசியம். மாலையில், இரவில் செய்தல் கூடாது.
பெயர் சூட்டும் நிலைகளை கீழ்க்கண்ட ஐந்து வழிகளில் நடத்தலாம்:
அவர்களது குடும்பத்தின் குலதெய்வத்தின் பெயரை சூட்டலாம்.
அந்த குழந்தை பிறந்த மாதத்திற்கான முதல் எழுத்துவரும்படி பெயரை அமைத்துக் கொள்ளலாம். சித்திரை மாதத்தில்
பிறந்தால் ஆண் என்றால் சிதம்பரம் என்றும், பெண் என்றால் சித்ரா போன்ற பெயர்களை வைக்கலாம்.
அக்குழந்தை பிறந்த நட்சத்திரத்திற்குரிய எழுத்தைஅக்குழந்தையின் முதல் எழுத்தாக வைத்துக் கொள்ளலாம்.
குடும்பத்தில் உள்ள பரம்பரையாக வைக்கும் பெயரை வைத்துக் கொள்ளலாம்.
தனது முன்னோர்களின் பெயரை அதாவது பாட்டனார்,பாட்டி, இவர்களின் பெயரை வைத்துக் கொள்ளலாம். மேலும் பெற்றோர்கள் விரும்பும் பெயரை வைப்பது சிறப்பாகும்.
உதாரணமாக:-ராஜேஸ்வரி என்று அப்பெண்ணிற்கு பெயர் இருந்தால் அக்குழந்தையை ' ராஜி' என்று அழைப்பதில்பெற்றோர்களுக்கு விருப்பமானால் அப்பெயரையே அழைப்பது சிறப்புடையதாகும்.அதே நேரத்தில் பெண் வளரும் சமயம் அந்த பெயர் பெண்ணிற்கு நன்மை தரும் படியும் அதிர்ஷ்டமாகவும் உள்ளதா என்பதனை தகுந்த ஜோதிடர் மூலம் உறுதி செய்து கொள்வது அவசியம். பெயரை சுருக்கி அழைப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடில்லை.எனினும் பெற்றோர் பெயரை முழுதும் சொல்ல தயக்கம் உள்ளோர் இப்படி செய்வதில் தவறில்லை.எந்த ஒரு தருணத்திலும் எண்ணியல் நபர்கள் அர்த்தமற்ற எழுத்துக்களை அதாவது பொருளற்ற பெயர் உச்சரிப்பு வரும்படி அமைத்து கொடுத்தால்,கண்டிப்பாக மறுக்கவும்.எவ்வளவு அதிர்ஷ்ட கூட்டு தொகை எண்ணாக இருப்பினும்,அர்த்தமற்ற அதிர்வுகளை கொண்ட பெயர் மிகுந்த சேதத்தை விளைவிக்கும். பலர் தற்காலத்தில் பகட்டாக இருக்க அர்த்தமற்ற பெயர்களை அதாவது அவர்களது பரம்பரைக்கு உறவில்லாத பெயர்களை வைக்கின்றனர். இது எத்தகைய விளைவை தரும் என்பது பிற்காலத்தில் புரிய வரும்.
குழந்தைக்கு பல் முளைக்கும் மாதத்திற்கு தரும் பலன்கள்:
குழந்தை பிறந்த முதல் மாதத்தில் பல் முளைத்தால்குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கும்.
குழந்தை பிறந்த 2-வது மாதத்தில் பல் முளைத்தால்சகோதரனுக்கு ஆகாது.
குழந்தை பிறந்த 3-வது மாதத்தில் பல் முளைத்தால்சகோதரிக்கு ஆகாது.
குழந்தை பிறந்த 4-வது மாதத்தில் பல் முளைத்தால்-தாய்க்குஆகாது.
குழந்தை பிறந்த 5-வது மாதத்தில் பல் முளைத்தால்-சகோதரசகோதரிக்கு ஆகாது.
குழந்தை பிறந்த 6-வது மாதத்தில் பல் முளைத்தால்குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும்.
குழந்தை பிறந்த 7-வது மாதத்தில் பல் முளைத்தால்பெற்றோருக்கு நன்மை தரும்.
குழந்தை பிறந்த 8-வது மாதத்தில் பல் முளைத்தால்-குழந்தைஉடல்நலம் பெறும்.
குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் பல் முளைத்தால் செல்வம்சேரும் குடும்பத்தில்.
குழந்தை பிறந்த 10-வது மாதத்தில் பல் முளைத்தால்வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும்.
குழந்தை பிறக்கும் பொழுது பல்முளைத்தே பிறந்தால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆகாத காலமாகும்.
முதலில் மேற்பல் முளைத்தால் தந்தைக்கு ஆகாத காலமாகும்.தந்தை பல கஷ்டங்களை அனுபவிப்பார்.
குறிப்பு : தற்காலத்தில் மேற்கண்ட விஷயங்களை உங்களின் ஆய்வுக்காகவும் விழிப்புணர்விற்காகவும் மட்டுமே பயன்படுத்தவும். தற்கால உணவு பழக்கம் மற்றும் பல்வேறு பழக்கவழக்கங்களால் பற்கள் பல குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நாட்கள் முன்னரும் தாறுமாறாகவும் வளருகிறது. பற்கள் நம் முன்னேற்றத்தையும் எதிர்காலத்தையும் குறிக்கும் மிக முக்கிய ஒன்றாகும். பற்கள் இருக்கும் விதம் பற்றி அங்க சாஸ்திரம் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு சூட்சும குறிப்புகள் உள்ளன. ஒருவரின் பற்களின் அமைப்பு மற்றும் அதை பராமரிக்கும் விதம் வைத்து அவர்களின் எதிர்காலம் பற்றி எம்மால் துல்லியமாக கூற முடியும். ஆகையால், மேற்சூன முன்னோர் விஷயங்களை எண்ணி பயம் கொள்ளாமல் எச்சரிகைக்காக மட்டுமே உபயோகம் செய்யவும்.
குழந்தைக்கு முதலில் அன்னம் ஊட்ட ஏற்ற நாட்கள்:-
ஆண் குழந்தைக்கு அன்னம் ஊட்ட 6-வது மாதமும் பெண்குழந்தைக்கு 5-வது மாதமும் சிறந்ததாகும். அதில் மிருகசீர்சம்,ரேவதி, சித்திரை, அனுஷம், அஸ்த்தம், அஸ்வினி, பூசம், சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரம்,உத்திராடம், உத்திரட்டாதி, ரோகிணி இந்த நட்சத்திரங்களில்சதுர்த்தி, சதுர்தசி திதிகளில், வளர்பிறையில் முற்பகலில்,அக்குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தில் முதலில் அன்னம்ஊட்ட ஏற்ற காலமாகும். அக்காலம் அக்குழந்தையின் லக்னத்திற்கு 1-4-7-5-9-3-இல் சுபக்கிரகங்களும் பாவிகள் 3-6-11-லும் 1-6-8-இல் சந்திரன் இல்லாமலும் இருக்கும் காலமாக முகூர்த்தம் அமைக்க வேண்டும்.
அக்குழந்தையின் பிறந்த லக்கனத்திற்கு 1-4-7-9-12-ல் சந்திரன் இல்லாமல் பார்த்து முகூர்த்தம் அமைக்க வேண்டும்.
குரு மேற்கூறிய இடங்களில் இருப்பது நீண்ட ஆயுளைத் தரும்.
புதன் மேற்கூறிய இடங்களில் இருப்பது அறிவாற்றலைத் தரும்.
சுக்கிரன் மேற்கூறிய இடங்களில் இருப்பது மகிழ்ச்சியைத் தரும்.
காது குத்துவதற்கு ஏற்ற காலம்:-
பொதுவாக காது குத்துவது 6-7-8-வது மாதத்தில் செய்வதுநன்மை தரும். அது சாத்தியப்படவில்லையெனில் 3-வது வயதில்செய்வது நலமாகும். பிறந்த வீட்டில் 12 (அ) 16-வது நாளிலும் காதுகுத்தலாம். திங்கட்கிழமை, புதன் கிழமை, வியாழன் வெள்ளிக்கிழமைகளில் பிறந்த நட்சத்திரத்தில் அல்லது 10, 19-வதுநட்சத்திரத்தில் அல்லது மிருகசீர்சம், ரேவதி, அனுஷம், அஸ்தம், அசுவினி, பூச நட்சத்திரத்தில் வளர்பிறையில் ஏகாதசி - சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் காது குத்துவதற்கு ஏற்ற காலம்.
முதலில் கல்வி கற்க, பள்ளி செல்ல ஏற்ற காலம்:-
5 வயது முடிந்தவுடனே தான் பள்ளியில் சேர்க்க வேண்டும்என்பது முன்னோர்கள் சொன்ன விதியாகும். ஆனால் இன்றைய நாகரீக கம்ப்யூட்டர் உலகில் Pre.K.G இல் 1-வது வயது முடிந்தவுடனேயே சேர்த்து விடுகிறார்கள் ஆனால் ஐந்து வயது ஆரம்பத்தில் முதல் வகுப்பில் சேர்ப்பது குழந்தைக்கும் உடல் நலமும், கல்வி கற்பதில் ஆர்வமும் தரும்.
அஸ்தம், அஸ்வினி, பூசம், திருவோணம், சுவாதி, ரேவதி,புனர்பூசம், அவிட்டம், சித்திரை, அனுஷம், இந்தநட்சத்திரங்களில் திருதியை, துவிதியை, பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி, துவாதசி இந்த திதிகளில் சரராசியல்லாத லக்கனத்தில்,
லக்னத்திற்கு 8-ஆம் பாவத்தில் கிரகங்கள் இல்லாத காலத்தில்ஞாயிறு, வியாழன், புதன், வெள்ளிக்கிழமைகளில், லக்னத்திற்குகேந்திர-திரிகோணத்தில் சுபக் கிரகங்கள் இருக்கும் காலத்தில்முதலில் பள்ளிக்கு அனுப்புவதற்கு ஏற்ற காலமாகும்.
Comments
Post a comment