தங்கம் வீட்டில் தங்குவதற்கு புதிய நகைகள் வாங்க ஏற்ற நாட்கள்:-
விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம், கார்த்திகை, உத்திராடம் இந்தநட்சத்திரங்களை ஞாயிறு, செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில், லக்னம், மேஷம், விருட்சிகம், சிம்ம லக்னம் தவிர மற்ற லக்னங்கள் ஏற்ற லக்னங்களாகும். இக்காலங்களில்வாங்கும் ஆபரணங்கள், தங்க, வைர நகைகளானாலும் யோகம்தரும்.
குருபகவான் 1-3-6-10-இல் வரும் காலம் இறைவனை பிரார்த்தனை செய்ய ஏற்ற காலம்.
குரு-ஆட்சி, உச்சம் பெற்று, நவாம்சத்தில் ஆட்சி உச்சம பெற்றும், வர்க்கோதமம் பெற்றும் எந்த இடத்தில் இருந்தாலும்நற்காரியம் செய்ய ஏற்ற காலமாகும்.
குரு நீசம்பெற்றாலும், பகை வீட்டில் இருந்தாலும் நன்மையானகாரியங்கள் செய்ய ஏற்ற காலமல்ல.
சந்திரன் தரும் நற்காலம்:
ஆட்சி சந்திரன் உச்சம் எந்த பெற்று இடத்தில் இருப்பது ராசியில், கல்விகற்க இருந்தாலும், புதிய அம்சத்தில் தொழில்
துவங்க, திருமணம் செய்ய ஏற்ற காலமாகும். வர்க்கோதமம் பெறுவதும் ஏற்ற நற்காலமாகும். சந்திரன் திருவோணம், புனர்பூச நட்சத்திரத்தில் இருந்து அம்சத்தில் ஆட்சி பெறுவது யோகமான காலமாகும்.
சந்திரன் கடகத்தில் புனர்பூசம் 0-3.20 பாகை இருந்தால்அம்சத்திலும் கடகத்தில் இருப்பார் திருவோணம். 10-13.20 வரைஇருப்பது அம்சத்தில் கடகத்தில் இருப்பது. அம்சத்தில் ஆட்சி பெறும் நிலை யோகம் தரும் காலம். இக்காலத்தில் நற்காரியம்எதுவும் ஆரம்பிக்கலாம். சந்திரன்-நவாம்சத்தில் சுக்கிரன்வீட்டிலும், சுக்கிரன் லக்கனத்திற்கு 1-5-9-லும் குரு லக்கனத்தில்இருக்கும்பொழுது, கல்வி, புதிய தொழில் ஆரம்பிக்க ஏற்ற காலமாகும். ஆனால் சந்திரன் நவாம்சத்தில் சனியின் வீட்டில்இருக்கும்பொழுது எதையும் ஆரம்பிக்கக் கூடாது. சூரியன்மறைந்து சந்திரன் உதயமாகும்பொழுது எக்காரியமும் ஆரம்பிக்கக் கூடாது.
திருமணம் செய்வதற்கு ஏற்ற மாதம்:
சித்திரை, வைகாசி, ஆனி, கார்த்திகை, தை, மாசி மாதங்கள் திருமணம் செய்வதற்கு ஏற்ற மாதங்களாகும்.
ஆண், பெண் இருவரின் பிறந்த நட்சத்திரம், திதி,மாதங்களில் திருமணம் செய்ய ஏற்ற காலமல்ல.
ஒரே குடும்பத்தில் மகனுக்கோ, மகளுக்கோ இரண்டுதிருமணமும் ஆறுமாத இடைவளிக்குப் பிறகே செய்யவேண்டும்என்பது விதியாகும். இன்றைய நிலையில் இது சாத்தியமில்லைதான்).
ஒரே குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பிக்கு மற்ற குடும்பத்திலுள்ள அக்கா, தங்கையை திருமணம் செய்தல் கூடாது என்பது விதியாகும்.குடும்பத்தில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் அந்த குடும்பத்தில் ஒரு மாதம் சென்ற பிறகே சுபகாரியங்கள் செய்தல் வேண்டும்.
திருமணம் நடைபெறும் காலத்தில் ஏற்படும் லக்னத்திற்கு2-இல் பாவிகள் இருந்தாலும் பாவிகள் வக்கிரம் பெற்று 12-இல் இருந்தாலும், அது கர்த்தாரி யோகம் என்றும் இதேபோல்சந்திரனும், கர்த்தாரி யோகம் பெறுமானால் அக்காலத்தில்திருமணம் செய்தல் கூடாது.
மேலும் லக்கனத்திற்கு 5-7-9-ஆம் பாவங்களும் கர்த்தாரியோகம் பெறுதல் கூடாது. (கர்த்தாரி என்றால் கத்தரி என்று பெயர்) இதனால் திருமணம் நடைபெறும் காலத்தில் ஏற்படும் லக்னமும், சந்திரனும் பாவிகளுக்கிடையே இருக்கக் கூடாது.
திருமணம் நடைபெறும் காலத்தில் சூரியனும் சந்திரனும் இணைந்திருந்தாலும் (அமாவாசை யோகம்)-சந்திரன், செவ்வாய் இணைந்திருந்தாலும், சந்திரன் சனியுடன் இணைந்திருந்தாலும்,மேலும் ராகு, கேதுவுடன் இணைந்திருந்தாலும் அக்காலம் திருமணம் செய்தல் கூடாது.
சந்திரன் குருவுடன் இணைந்திருந்தாலும், அல்லது புதனுடன் இணைந்திருந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும். சந்திரன் ஆட்சி உச்சம், நட்பு வீட்டில் இருப்பது நன்மை தரும்.
திருமணம் நடைபெறும் காலத்தில் வைக்கப்படும் லக்னம்,மணமகன், மணமகளின் பிறந்த லக்னம், பிறந்த ராசிக்கு 8-வதுராசி லக்னமாக அமையக் கூடாது. அது தோஷமாகும்.
பிறந்த லக்னாதிபதியும், ராசிக்கதிபதியும்-திருமணம்நடைபெறும் காலத்தில் வைக்கப்படும் லக்னாதிபதிக்குநட்பானால் நன்மை தரும். மேலே சொல்லப்பட்ட தோஷம்நீங்கிவிடும். அந்த 8-ஆம் அதிபதி ஆட்சி உச்சம் ராசி அம்சத்தில் பெற்றாலும் தோஷம் நீங்கிவிடும்.
ராசி அம்சத்திற்கு 8-வது ராசியாகவோ, 8-ஆம் அதிபதிஇருக்கும் ராசியாகவோ திருமணம் நடைபெறும் காலத்தில்வைக்கப்படும் லக்னம் அமையக் கூடாது.
இருவரின் ராசி அம்சத்திற்கு 12-வது ராசி, 12-வது அம்ச ராசி, 12-ஆம் அதிபதி இருக்கும் ராசியாக திருமணம் நடைபெறும்
காலத்தில் வைக்கப்படும் லக்னம் அமையக் கூடாது. இவ்விதம் அமையுமானால் கணவன்-மனைவி இருவரிடையே அடிக்கடி சண்டை ஏற்படும்.
இதில் இருவரது லக்கனமும், ராசியும் மேஷமாக அமைந்து திருமணம் நடைபெறும். காலத்தில் வைக்கப்படும் லக்னம் விருச்சிகமாக அமையுமானால் அது மேஷத்திற்கு 8-வது ராசி என்பதால் மேலே சொல்லப்பட்ட விதிப்படி திருமணம் செய்ய ஏற்றதல்ல. ஆனால் இரண்டின் ராசிக்கதிபதியும் செவ்வாயாக அமைவதால் மேஷ லக்னம் திருமண காலத்தில் அமைவது தோஷமில்லை. இதேபோன்று தனுசு ராசியாக இருந்து திருமண லக்னம் கடகமானால் குருவுக்கு நட்புராசி கடகம் என்பதால்அது 8 ஆக அமைந்தாலும் தோஷமில்லை. திருமண லக்னம் தனுசு ராசிக்கு கடகமாக வைக்கலாம். இதேபோன்று பிறந்த லக்னாதிபதியும், திருமண லக்னத்தின் அதிபதியும் ஒரே கிரகமானாலும், இரண்டும் நட்பு கிரகமானாலும் அந்த லக்னத்தில் திருமணம் வைக்கலாம்.முகூர்த்த லக்னத்திற்கு அதன் அதிபதி 1-4-7-10-இல்இருந்து சுபரால் பார்க்கப்பட்டும், சந்திரனும் முகூர்த்த லக்னத்திற்கு 4-7-10 5-9-இல் இருந்து சுபரின் பார்வை பெறுவது நன்மை தரும் முகூர்த்த லக்னமாகும்.
திருமணம் நடைபெற ஏற்ற நட்சத்திரம்:-
மிருகசீர்சம்,அஸ்தம்,மூலம்,அனுஷம்,மகம்,ரோகிணி,ரேவதி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, சுவாதி இந்தநட்சத்திரங்கள் ஏற்ற நட்சத்திரங்களாகும். இவை மணமகன், மணமகள் இருவருக்கும் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து 3-5-7, 12,14, 16, 21, 23, 25-வது நட்சத்திரமாக வரக் கூடாது. அது தாரா பலமில்லாத நட்சத்திரமாகும். அமாவாசை திதியும் ஆகாது.
தேய்பிறையில் பஞ்சமி திதி வரையிலும், வளர்பிறையிலும்திருமணம் செய்யலாம். திங்கட்கிழமை, புதன், வியாழன், வெள்ளிதிருமணம் செய்ய ஏற்ற நாட்களாகும். ஞாயிறும் ஏற்ற நாளாகும்.சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை திருமணம் செய்தால்பெண்ணை அன்று மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பமாட்டார்கள்.மேலும் முதன் முதலில் தாய்வீட்டில் இருந்து பெண்ணையும்,திருமணமானவுடன் மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பவும்மாட்டார்கள்.
நட்சத்திரங்களில் வரும் திதிகளில் நல்லவை செய்ய ஏற்காதவைகள்:-
ஆயில்ய நட்சத்திரத்தில் வரும் துவாதசி திதியில் நல்லவை செய்யக்கூடாது.
உத்திராட நட்சத்திரத்தில் வரும் பிரதமை திதியில் நல்லவை செய்யக்கூடாது.
அனுஷ நட்சத்திரத்தில் வரும் துவிதியை திதியில் நல்லவை செய்யக்கூடாது.
மக நட்சத்திரத்தில் வரும் பஞ்சமி திதியில் நல்லவை செய்யக்கூடாது.
உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வரும் திருதியை திதியில் நல்லவை செய்யக்கூடாது.
ரோகிணி நட்சத்ரத்தில் வரும் ஏகாதசி திதியில் நல்லவை செய்யக்கூடாது.
சுவாதி, சித்திரை நட்சத்திரத்தில் வரும் திரியோதசி திதியில் நல்லவை செய்யக்கூடாது.
அஸ்தம் மூலம் நட்சத்திரத்தில் வரும் சப்தமி திதியில் நல்லவை செய்யக்கூடாது.
கிருத்திகை நட்சத்திரத்தில் வரும் நவமி திதியில் நல்லவை செய்யக்கூடாது.
பூராட நட்சத்திரத்தில் வரும் அஷ்டமி திதியில் நல்லவை செய்யக்கூடாது.
ரோகிணி நட்சத்திரத்தில் வரும் சஷ்டி திதியில் நல்லவை செய்ய செய்யக்கூடாது.
குறிப்பு: தற்காலத்தில் பலரும் இது போன்ற நாட்களை தவிர்த்தால் எதுவுமே செய்ய முடியாமல் போகுமே எனவும்,இவை எல்லாம் பழைய பஞ்சாங்கம் எனவும் நினைக்கக்கூடும்.இவற்றிற்கு பின்னர் பெரும் அறிவியல் மற்றும் கணிதம் இணைந்துள்ளது. நம் முன்னோர்களும் மகரிஷிகளும் பலவற்றைவனவியல் அடிப்படையில் கணித்து பிறகே இவற்றை கூறிவைத்தனர். எனினும், இந்த நாட்களை புதிய விஷயங்களுக்கு மட்டும் தவிர்த்தால் போதுமானது. தற்காலத்தில் எவருக்கும் எந்த ஒரு காரியமும் எடுத்த உடன் வெற்றியை தந்து விடுவதில்லை. சில நேரங்களில் ஆரம்பிக்கும் செயல்கள் தோல்வியிலும், சில காரிய தடைகளும்,வேறு சில பெரும் பொருட் சேதத்தினை உண்டும் செய்யும் விதமாகவும் அமைந்து விடுகிறது. சில புதிய விஷயங்களை நாள் பார்த்து செய்து உடனடி வெற்றியை பெறுவது மேற்கண்டவற்றை தவிர்க்க உதவும்.
Comments
Post a comment