> நட்சத்திர பஞ்சாங்க நுணுக்கங்கள் | SECRETS OF NAKSHATRAS & PANCHANGA PART 5 Skip to main content

நட்சத்திர பஞ்சாங்க நுணுக்கங்கள் | SECRETS OF NAKSHATRAS & PANCHANGA PART 5

நாட்களில் வரும் திதிகளில் நல்லவை ஆரம்பிக்க ஆகாதவை:-

ஞாயிற்றுக்கிழமையில் அஸ்த நட்சத்திரத்தில் பஞ்சமி திதிஆகாதவை.

திங்கட்கிழமையில் மிருக சீர்ச நட்சத்திரத்தில் சஷ்டி திதி ஆகாதவை.

செவ்வாய்க்கிழமையில் அஸ்வினி நட்சத்திரத்தில் சப்தமி திதி ஆகாதவை.

புதன்கிழமையில் அனுஷ நட்சத்திரத்தில் அஷ்டமி திதி ஆகாதவை.

வியாழக்கிழமையில் பூச நட்சத்திரத்தில் ஏகாதசி திதி ஆகாதவை.

வெள்ளிக்கிழமையில் ரேவதி நட்சத்திரத்தில் நவமி திதி ஆகாதவை.

சனிக்கிழமையில் ரோகிணி நட்சத்திரத்தில் ஏகாதசி திதி ஆகாதவை.

குறிப்பு: தற்காலத்தில் பலரும் இது போன்ற நாட்களை தவிர்த்தால் எதுவுமே செய்ய முடியாமல் போகுமே எனவும்,இவை எல்லாம் பழைய பஞ்சாங்கம் எனவும் நினைக்கக்கூடும்.இவற்றிற்கு பின்னர் பெரும் அறிவியல் மற்றும் கணிதம் இணைந்துள்ளது. நம் முன்னோர்களும் மகரிஷிகளும் பலவற்றைவனவியல் அடிப்படையில் கணித்து பிறகே இவற்றை கூறிவைத்தனர். எனினும், இந்த நாட்களை புதிய விஷயங்களுக்கு மட்டும் தவிர்த்தால் போதுமானது. தற்காலத்தில் எவருக்கும் எந்த ஒரு காரியமும் எடுத்த உடன் வெற்றியை தந்து விடுவதில்லை. சில நேரங்களில் ஆரம்பிக்கும் செயல்கள் தோல்வியிலும், சில காரிய தடைகளும்,வேறு சில பெரும் பொருட் சேதத்தினை உண்டும் செய்யும் விதமாகவும் அமைந்து விடுகிறது. சில புதிய விஷயங்களை நாள் பார்த்து செய்து உடனடி வெற்றியை பெறுவது மேற்கண்டவற்றை தவிர்க்க உதவும். 


நல்லவை நடக்க ஆகாத லக்னம்:- 

லக்னமும், நவாம்சத்தில் சந்திரனும் ராகு, கேது சனி செவ்வாய் இவர்களில் ஒருவர் இணைந்திருந்தால் அக்காலம் மதியம் 12 மணி, இரவு 12 மணியாக அமைந்திருந்தாலும் அல்லது நவாம்சலக்னத்தில் பாவிகள் இருந்தாலும், கிரகணம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவும், பூகம்பம் ஏற்பட்ட ஏழு நாட்களுக்குள்ளும் எந்த சுபகாரியங்களும் செய்தல் கூடாது.

குளிகன்,கலபேலா,யமகண்டம், கண்டக இந்த நான்கு யோகங்கள் வரும் காலங்களில் எந்த சுபகாரியங்களும் நடத்துதல் விடாது. (பிரயாணம் செய்தல், திருமணம் செய்தல் கூடாது).

சந்திரன் கோசாரத்தில் வரும் நிலையில் நலம் தரும் பாவங்கள்:-

ஒருவரின் ஜென்மராசிக்கு கோசார சந்திரன்3-6-10-11-7-ல் வரும் காலமும், வளர்பிறையில் 2-5-9-ல் வரும் காலமும் நல்லவை செய்ய ஏற்ற நாட்களாகும்.

குருவும், சுக்கிரனும் சூரியனுடன் அஸ்தமனம் பெறும்பொழுது சுபகாரியங்கள் எதையும் செய்தல் கூடாது.(குருவுக்கு 81/2 பாகை (Degrees) முன்பின் சூரியன் வரும்பொழுது குரு அஸ்தமனம் பெறும்).

குரு சிம்மராசியில் சிம்ம நவாம்சத்தில் இருக்கும்பொழுதுஎந்த சுபகாரியங்களும் செய்தல் கூடாது. (சிம்மத்தில் குரு 13.20to16.40 ல் இருக்கும்வரை சிம்ம நவாம்சம் பெறும்) இந்த காலத்தில் அதாவது சுமார் 3 மாத காலத்திற்கு எந்த சுபகாரியமும் செய்தல்கூடாது. (குறிப்பாக திருமணம் செய்தல் கூடாது).

சூரியன் மேஷத்தில் இருக்கும்பொழுது அதாவது சித்திரை மாதமும், அதே நேரத்தில் குரு சிம்ம ராசியில் சிம்ம நவாம்சம்பெறாத காலத்திலும் நடைபெறும் திருமணம் அந்தப் பெண்ணின்திருமண வாழ்க்கை சிறப்புறும். மகிழ்ச்சியாக அமையும்.அதாவது குருவின் பார்வை சூரியனுக்குக் கிடைப்பது யோகமான காலமே.

குரு மகர ராசியில் இருக்கும்பொழுது நீசம் பெறுகிறார். சில மாநிலங்களில்  குரு மகர ராசியில் வரும் வருடத்தில் சுபகாரியங்களைச் செய்வதில்லை. ஆனால் மகரத்தில் 5 பாகையில்(Degrees) வரும் காலம் அதிக நீசம் பெறுவார். அதனால் அதற்கு 3 பாகை (Degrees) முன் பின்னாக வரும் காலம் அதன் நீசத்தன்மை இருக்கும்.அதனால் சில பிரதேசங்களில் மகரத்தில் 2 பாகையில் (Degrees) இருந்து 8 பாகை (Degrees) வரை குரு இருக்கும் காலத்தில் சுப காரியங்களால் செய்வதில்லை.

எந்தக் காரியம் துவங்கினாலும் ஹோரை அறிந்து அதற்குண்டான ஹோரையில் துவங்குவது, பிரயாணம் செய்வது,திருமணம் நடத்துவது நன்மை தரும். 1 ஹோரை = 1 மணி நேரம். சூரிய உதயத்தில் இருந்து அந்த நாளுக்குரிய ஹோரைஆரம்பமாகும். உதாரணமாக சூரிய உதயம் 6.30 ஞாயிறு என்றால் 6.30-7.30 வரை சூரிய ஹோரை ஆகும். அதற்குப்பின் சுக்கிரன்புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என ஒருமணி நேரத்திற்குஒரு ஹோரையாக வரும். இதில் புதன், குரு, சுக்கிர ஹோரையில்சுபகாரியங்கள் துவங்கலாம்.

துருவ நட்சத்திரம்:-உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, ரோகிணி இந்த நட்சத்திரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை துருவ நட்சத்திரமாகும். இந்தக் காலங்களில் நிரந்தரமான செயல்களைச்செய்யலாம். விதை விதைக்க, சிறிய தோட்டம் அமைக்க, வீட்டுத்செயல்கள் தோட்டம், பூஞ்செடி நிரந்தரமாக நட இருக்கும் ஏற்ற காலமாகும். இதில் செய்யப்படும் செயல்கள் நிரந்தரமாக இருக்கும்.

உக்ர நட்சத்திரம்:-

பூரம், பூராடம், பூரட்டாதி, பரணி, மகம் இந்த நட்சத்திரங்களில் வரும் செவ்வாய்க்கிழமை - உக்ர நட்சத்திரங்களாகும். இந்த நாட்களில், விறகு மூட்டம் போட, செங்கல் சூளைக்கு தீ மூட்ட, பழைய வீட்டை இடிக்க ஏற்ற நட்சத்திரமும் நாளும் ஆகும். 

மிஸ்ர நட்சத்திரம்:-விசாகம் கிருத்திகை நட்சத்திரமாக வரும் புதன்கிழமை மத்திம நட்சத்திரமாகும். யாகம் வளர்க்க, ஹோமம்செய்ய ஏற்ற நாட்களாகும். தானதர்மம் செய்ய ஏற்ற நாட்களாகும்.

கிஸ்பிர நட்சத்திரம்:-அஸ்தம், அஸ்வினி, பூசம் இந்த நட்சத்திரமாக வரும் வியாழக்கிழமைகளில் விற்பதற்கு, உடல்உறவு கொள்ள, கல்விகற்க, நகைகள் வாங்க, அணிய, சிற்பம் செய்ய, கலைத்தொழிலை ஆரம்பிக்க ஏற்ற நாட்களாகும்.

மிருத்துவ நட்சத்திரம்:-மிருகசீர்சம்,ரேவதி, சித்திரைஅனுஷம் இந்த நட்சத்திரமாக வரும் வெள்ளிக்கிழமைகளில் பாட்டு கற்க, துணிகள் வாங்க, புதுத்துணிகள் அணிய, விளையாட்டில் ஈடுபட நகை வாங்க அணிய, நண்பர்களைக் காண ஏ ற்ற நாட்களாகும்.

தீக்ஷனா நட்சத்திரம்:-மூலம், கேட்டை, அனுஷம், ஆயில்யம் இந்த நட்சத்திரமாக வரும் சனிக்கிழமைகளில்ஜோதிடம், தந்திர சாஸ்த்திரம் இவைகளில் ஈடுபடவும், சண்டை ஏற்படும் நிலை, மிருகங்களை பழக்கவும் ஏற்ற நட்சத்திரமாகும்.

அகோமுக நட்சத்திரம்:-பூரம், பூராடம், பூரட்டாதி, பரணிமகம் இக்காலங்களில் கணிதம், ஜோதிடம் கற்கவும், சித்திரம்சிற்பம் படிக்கவும், இரயிலில் பிரயாணம் செய்யவும் ஏற்ற காலம்.

உருத்தவமுக நட்சத்திரம்:-உத்திரம் உத்திராடம்உத்திரட்டாதி, ரோகிணி. கட்டிடம் கட்ட ஆரம்பிக்க கோவில்திருப்பணி ஆரம்பிக்க, மண்டபம் கட்ட திருமணம் செய்ய பதவிஏற்க ஏற்ற காலமாகும்.

திரியகமுக நட்சத்திரம்:-அனுஷம், அஸ்தம், சுவாதி, புனர்பூசம், கேட்டை, அஸ்வினி இக்காலங்களில் கால்நடைகள்வாங்க அவைகளை பழக்க, உழவு செய்ய, விதைவிதைக்க, இசைக்கருவிகளைப் பழக, வாகனம் ஒட்ட, கடிதம் எழுத ஏற்ற காலமாகும்.

புனர்பூசம், பூசநட்சத்திரத்தில் சுமங்கலிகள் புத்தாடை அணியக் கூடாது.

புதிய உடையில் தீப்பிடித்து கருகினாலும், கிழிந்தாலும்,சேற்றில் ஒருபகுதி மூழ்கினாலும், அது தீமைகள் நடப்பதைமுன்பே தெரிவிப்பதாகும் (சகுனமாகும்) அது மனிதர்கள் அணிந்திருக்கும் உடையில் ஏற்பட்டாலும் இறைவனுக்கு அணிந்திருக்கும் உடையில் ஏற்பட்டால் நன்மைகள் நடைபெறஇருப்பதைத் தெரிவிப்பதாகும். ஆனால் அந்த உடையின் கரைமட்டும் கருகினால் அது தீமைகள் நடைபெற இருப்பதைத்தெரிவிக்கும் சகுணமாகும்.

மரம் செடி கொடி  நட :  விசாகம், மூலம், சதயம் இந்த நட்சத்திரங்களில் மரம் நடுவதனால் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

கால்நடைகளை (தற்காலத்தில் வாகனங்கள்) விற்பதற்கு ஏற்ற நட்சத்திரம்:-ரேவதி, விசாகம், புனர்பூசம், கேட்டை, சதயம், அவிட்டம் ஆகியநட்சத்திரங்களில் பசு, எருதுகளை விற்பனை செய்வதால் லாபம் அதிகம் பெறலாம்.

மருத்துவமனையில் சேர்வதற்கு, மருந்து உண்ண, அறுவைச் சிகிச்சைச் செய்ய ஏற்ற நாட்கள்:-

ஒருவரின் பிறந்த நட்சத்திரம் மேலே கூறப்பட்ட எதற்கும் ஏற்றதல்ல. அந்த நேரத்தில் ஏற்படும் லக்னத்தில் சுபக்கிரகங்களான சுக்கிரன், புதன், குரு, பூரணச சந்திரன் இருக்கவேண்டும். லக்னத்திற்கு 7 - 8 - 12ல் எந்த கிரகமும் இருப்பது கூடாது. ஞாயிறு, திங்கள், வியாழக் கிழமை, வெள்ளிக்கிழமை ஏற்ற கிழமைகளாகும். அமாவாசை, பௌர்ணமி திதிகளைத் தவிர்த்து மற்ற திதிகள் ஏற்ற திதிகளாகும். நட்சத்திரங்கள்:-விசாகம், மூலம், சதயம், திருவோணம், அவிட்டம் இந்த நட்சத்திரங்கள் தகுந்த நட்சத்திரங்களாகும். 

எதையும் வாங்குவதற்கேற்ற நட்சத்திரங்கள்:-

ரேவதி, சதயம், அஸ்வினி, சுவாதி, திருவோணம், சித்திரை நட்சத்திரங்களில் பொருட்களை வாங்குவதற்கேற்ற நட்சத்திரங்களாகும்.

புதிய கடை திறப்பதற்கு ஏற்ற நாட்கள்:-பூரம், பூராடம்,பூரட்டாதி, விசாகம், கார்த்திகை, ஆயில்யம், பரணி நட்சத்திரங்கள் ஏற்ற நட்சத்திரங்களாகும்.

அந்த லக்னத்திற்கு கேந்திர திரிகோணத்தில் சுபரும் பாவிகள் 3-6-11-இல் இருப்பதும் நன்மை தரும். கும்ப லக்னம்தவிர மற்ற லக்னம் நலமாகும். சுக்கிரன் அல்லது சந்திரன்

லக்னத்திலும் பாவிகள் 8-12-இல் இல்லாமலும் சுபக்கிரகங்கள்2-10-11-இல் இருக்கும்படியாக லக்னம் அமையுமானால் அந்தக்கடையில் வியாபாரம் பெருகும். லாபம் தரும். செவ்வாய்க்கிழமை, கும்ப லக்னமும், ஆகாத கிழமையும், லக்னமுமாகும்.

குதிரைகளை (தற்காலத்தில் வாகனங்கள்) வாங்க, விற்க, பழக்க (TESTING) , பயிற்சி தர (MAINTANENCE) ஏற்ற நட்சத்திரங்கள்:-

ரேவதி, அவிட்டம், மிருகசீர்சம், சுவாதி, சதயம், புனர்பூசநட்சத்திரங்களாகும். செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்கள் ஏற்ற நாட்களாகும்.

அந்தக நட்சத்திரம்:-ரோகிணி, பூசம், உத்திரம், விசாகம்,பூராடம், அவிட்டம், ரேவதி-இந்த ஏழு நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களில் பொருட்கள் தவறிவிட்டாலும், திருட்டுப்போனாலும் உடன் கிடைத்துவிடும். கிழக்குப் பகுதியைக்குறிக்கும்.
 
Comments

Popular posts from this blog

எதிரிகளை ஓட ஓட விரட்டும் மூலிகை மந்திர பிரயோகம்

அகோர வீர்யம் கொண்டவளும் அதர்வண வேதத்தில் பூஜிக்கப்படும் அசுர துர்கையின் வடிவான இம்மூலிகை வீடியோவில் குறிப்பிட்டுள்ள படி பூஜித்தால் எதிரிகளை துவம்சம் செய்யும். செல்வம் சேரும். கோடிட்ட இடத்தில எதிரியின் பெயரை நிரப்பி கூறி வரவும். அதீத சக்தி வாய்ந்த இந்த மந்திர பிரயோகம் தவறான தர்மமில்லாத விஷயத்திற்கு செய்தால், செய்பவருக்கும் அவர் குடும்பத்திற்கும்  கடும் விளைவுகள் ஏற்படும். எனவே கவனம் தேவை. தெளிவாக வீடியோவை ஒரு முறைக்கு இரு முறை பார்த்தபின் செய்து வரவும்.  ASURI DURGA MANTRA IN ENGLISH : OM̐ KAṬUKE PATRE SUBHAGE ĀSURI RAKTE-RAKTA-VĀSASE ATHARVAṆASYA DUHITE AGHORE AGHORA-KARMA-KĀRIKE _______________ GATIṂ DAHA DAHA UPAVIṢṬASYA GUDAṂ DAHA DAHA SUPTASYA MANO DAHA DAHA PRABUDDHASYA HṚDAYAṂ DAHA DAHA HANA HANA PACA PACA TĀVAT DAHA TĀVAT PACA YĀVAN-ME-VAŚAM-ĀYĀTI HUM̐ PHAṬ SVĀHĀ । அசுரி துர்கை மந்திரம் தமிழில் : ஓம் கட்டுக்கே பத்ரே  ஸுபகே அசுர ரக்தே ரக்த வஸசே அதர்வனஸ்ய துஹிதே அகோரே அகோர கர்மா கரிகே  ________________கடீம் தஹ தஹ குடாம் தஹ  தஹ சுப்தஸ்ய மனோ தஹ தஹ பிரபுத்தஸ்ய ஹ்ருதயாம் தஹ தஹ பஸ பஸ த

NEEM KAROLI BABA | நீம் கரோலி பாபா

 

பணம் வர பண வசியம் செய்ய கருப்பு மஞ்சள்

பணம் வர பண வசியம் செய்ய  கருப்பு மஞ்சள்  இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம். கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சந்தைகள் மிகுந்து இருந்தால், மனைவி இதை குலைத்து முகம் முழுதும் தேய்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும்.  சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் இதை நடு விரலில் ஊசியால் குத்தி அதன் ரத்தத்தில் இதை குழைத்து நெற்றியில் இட்டு செல்கின்றனர். வராத பணமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.  பிற்சேர்க்கை 2020: இவற்றை பற்றிய உண்மைகளை முதன் முதலில் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்த பெருமை ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களையே சேரும். அவரின் வேந்தர் தொலைக்காட்சி மூன்றாவது கண் நேர்காணல் நிகழ்ச்சி (2015)யில் இதை பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார்.  அந்நா