> விநாயக சதுர்த்தி பூஜை | VINAYAGA CHATUTHRI POOJA IN TAMIL Skip to main content

விநாயக சதுர்த்தி பூஜை | VINAYAGA CHATUTHRI POOJA IN TAMIL

விநாயக சதுர்த்தி பூஜையை பலர் வெறும் பொறி கடலை வைத்து தூப தீபம் காட்டி வழிபட்டு வருகின்றனர். இது தவறான முறையாகும். தாந்த்ரீக ஜோதிடர் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி, விநாயக சதுர்த்தியில் தமிழ் சித்தர்கள் முறைப்படி எளிய அதே சமயம் மிக வீரியமிக்க பூஜை முறையை இவ்விடம் விளக்கியுள்ளார். வேத முறைப்படி விநாயக சதுர்த்தி பூஜை செய்வது பற்றியும் இந்த இணைய பக்கத்தில் வேறு பதிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.விரும்பிய அன்பர்கள் தங்களுக்கு தகுந்த முறையை தேர்ந்தெடுத்து செய்து வரலாம். இரண்டு முறைகளும் விநாயகரை பரிபூர்ண திருப்தி செய்ய கூடிய சக்தி வாய்ந்த முறைகள் ஆகும். 


தேவையான பொருட்கள் : சுத்தமான மண் பிள்ளையார் ,திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி,வாழையிலை. பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள், அருகம்புல் (அர்ச்சனைக்கு) பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள் மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு ,சுண்ணாம்பு மற்றும் அவைகளை வைக்க கிண்ணங்கள் ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு. பஞ்ச பாத்திரம், உத்தரினி. மாக்கோலம் போட தேவையான பொருட்கள். 

நைவேத்தியங்கள் (முடிந்ததை மட்டும் செய்யவும், கொழக்கட்டை கட்டாயம்) வடை (உளுந்து வடை) கொழுக்கட்டை (இனிப்பு மற்றும் உப்பு) ,வெல்ல பாயசம், வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா பழங்களும். மஞ்சள் பிள்ளையார் பிடித்து கொள்ளவும் . 

கீழ்கண்ட மந்திரம் கூறி ஒவ்வொரு முறையும் சிறு அளவு நீர் அருந்தவும் அச்சுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்த்யா நமஹ 

கீழ்கண்ட மந்திரம் கூறி தலையில் குட்டி கொள்ளவும். 

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே 

சங்கல்பம் (வேண்டுதல்) : குடும்ப சகிதம் வேண்டுதல்கள் செய்யவும். கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறவும். 

கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் 

பின்னர் கீழ்கண்ட சுலோகம் சொல்லி பின் சிறு அர்ச்சனை செய்ய வேண்டும். அருகம்புல்லால் கீழ்கண்ட அர்ச்சனை செய்யவும். 

கணபதி பூஜை 

ஓம் சுமுகாய நம: | ஓம் ஏகதந்தாய நம: | ஓம் கபிலாய நம: | ஓம் கஜகர்ணாய நம: | ஓம் லம்போதராய நம: | ஓம் விகடாய நம: | ஓம் விக்னராஜாய நம: | ஓம் விநாயகாய நம: | ஓம் தூமகேதவே நம: | ஓம் கணாத்யக்ஷாய நம: | ஓம் பாலசந்த்ராய நம: | ஓம் கஜானனாய நம: | ஓம் வக்ரதுண்டாய நம: | ஓம் சூர்ப்பகர்ணாய நம: | ஓம் ஹேரம்பாய நம: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: | ஓம் ஸித்திவிநாயகாய நம: | 

அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும். ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: 

நானாவித பரிமள பத்ர புஷ்பாணி சமர்பயாமி.


விநாயக அர்ச்சனை கீழ்கண்ட லிங்கில் சென்று பார்க்கவும்


 https://www.pariharapooja.com/2020/08/108.html 


அர்ச்சனை செய்தபின் இந்த அதீத சக்தி வாய்ந்த சித்த விநாயக மந்திரம் கூறவும் (27 முறை) 

ஓம் கணபதி ஓங்கார கணபதி குருகுரு கணபதி குண்டலி கணபதி வாவா கணபதி வல்லபை கணபதி ஆதிக் கணபதி அநாதிக் கணபதி சக்திக் கணபதி சமயக் கணபதி சித்திக் கணபதி சிவசிவ கணபதி தம்பன மோகன சத்ரு மாரணம் வசிய உச்சாடனம் வாலைக் கணபதி அஷ்டமா சித்தியை ஆடுங் கணபதி ஜெயஜெய கணபதி சீக்கிரம் வாவா உன்னை நினைக்கவே ஓடிவா கணபதி சித்து களாடும் செல்வக் கணபதி ஆம்ஆம் ஓம்ஆம் ஐயுங் கிலியும் சௌவும் கணபதி தாண்டவமாடு என் சொல்படியே எதிரினிலாடு நீயே நானாய் நானே நீயாய் நினைவிலும் வாக்கிலும் நிற்க சுவாஹா 

மேற்கண்ட மந்திரம் கூறி பின் ஹோமம் செய்யவும். பின் நிவேதனம், தூப தீபம், செய்து நமஸ்கரிக்கவும்.ஹோமம் செய்ய 'ஓம் கம் கணபதயே நமஹ" கூறவும். 


மேலும் விவரங்கள் வேண்டுவோர் கீழ்கண்ட யூ டியூப் வீடீயோவை பார்க்கவும். 


https://youtu.be/zCyfh9tCfMo

Comments

Popular posts from this blog

NEEM KAROLI BABA | நீம் கரோலி பாபா

எதிரிகளை ஓட ஓட விரட்டும் மூலிகை மந்திர பிரயோகம்

அகோர வீர்யம் கொண்டவளும் அதர்வண வேதத்தில் பூஜிக்கப்படும் அசுர துர்கையின் வடிவான இம்மூலிகை வீடியோவில் குறிப்பிட்டுள்ள படி பூஜித்தால் எதிரிகளை துவம்சம் செய்யும். செல்வம் சேரும். கோடிட்ட இடத்தில எதிரியின் பெயரை நிரப்பி கூறி வரவும். அதீத சக்தி வாய்ந்த இந்த மந்திர பிரயோகம் தவறான தர்மமில்லாத விஷயத்திற்கு செய்தால், செய்பவருக்கும் அவர் குடும்பத்திற்கும்  கடும் விளைவுகள் ஏற்படும். எனவே கவனம் தேவை. தெளிவாக வீடியோவை ஒரு முறைக்கு இரு முறை பார்த்தபின் செய்து வரவும். 
ASURI DURGA MANTRA IN ENGLISH :OM̐ KAṬUKE PATRE SUBHAGE ĀSURI RAKTE-RAKTA-VĀSASE ATHARVAṆASYA DUHITE AGHORE AGHORA-KARMA-KĀRIKE _______________ GATIṂ DAHA DAHA UPAVIṢṬASYA GUDAṂ DAHA DAHA SUPTASYA MANO DAHA DAHA PRABUDDHASYA HṚDAYAṂ DAHA DAHA HANA HANA PACA PACA TĀVAT DAHA TĀVAT PACA YĀVAN-ME-VAŚAM-ĀYĀTI HUM̐ PHAṬ SVĀHĀ ।அசுரி துர்கை மந்திரம் தமிழில் :ஓம் கட்டுக்கே பத்ரே  ஸுபகே அசுர ரக்தே ரக்த வஸசே அதர்வனஸ்ய துஹிதே அகோரே அகோர கர்மா கரிகே  ________________கடீம் தஹ தஹ குடாம் தஹ  தஹ சுப்தஸ்ய மனோ தஹ தஹ பிரபுத்தஸ்ய ஹ்ருதயாம் தஹ தஹ பஸ பஸ தவத்…

பணம் வர பண வசியம் செய்ய கருப்பு மஞ்சள்

பணம் வர பண வசியம் செய்ய  கருப்பு மஞ்சள் 
இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம். கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சந்தைகள் மிகுந்து இருந்தால், மனைவி இதை குலைத்து முகம் முழுதும் தேய்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும். சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் இதை நடு விரலில் ஊசியால் குத்தி அதன் ரத்தத்தில் இதை குழைத்து நெற்றியில் இட்டு செல்கின்றனர். வராத பணமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. 
பிற்சேர்க்கை 2020: இவற்றை பற்றிய உண்மைகளை முதன் முதலில் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்த பெருமை ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களையே சேரும். அவரின் வேந்தர் தொலைக்காட்சி மூன்றாவது கண் நேர்காணல் நிகழ்ச்சி (2015)யில் இதை பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார். 
அந்நாட்கள…